சொல்லதிகாரம் - இடையியல்153

உ-ம் : 1 சென்றே யெறிப ஒருகால் சிறுவரை
          நின்றே யெறிப பறையினை-நன்றேகாண்
          முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெ ழுவர்
          செத்தாரைச் சாவார் சுமந்து                (நாலடி.24)

இதனுள் ‘நன்றே    காண்’    என்பது    ‘தீதேகாண்’  என்னுங்
குறிப்புணர்த்திற்று.   ‘நின்னையன்றே   திருமுக்குடையாய்’  என்றவழி
‘அன்றே’  என்பது  அல்லாமையைக்  குறியாது   முக்குடையானையே
சுட்டிநின்று அவன்கேட்பது பயனாக வந்தது.

2 பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ
பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயமில் அறிவி  னவர்                      (நாலடி.192) 

என்பதனுள் ‘அன்னோ’ என்பது அருள்  குறித்து   நின்றது. ‘வெந்திறற்
கூற்றம் பெரும்பே  துறுப்ப-அந்தோ  அளியென   வந்தனென்  என்ற’
என்றவழி,  அந்தோ  என்பது  கேடு   குறித்து  நின்றது. அன்னபிறவு
மாவன வந்தவழிக் கண்டு கொள்க.

நச்.

இதுவுமது.

இ-ள் :  நன்று ஈற்று  ஏயும்-நன்றினது  ஈற்றின்கண்  வந்த ஏயும்,
அன்று  ஈற்று ஏயும்-அன்றினது  ஈற்றின்கண்வந்த  ஏயும், அந்து ஈற்று
ஓவும்-அந்தினது ஈற்றின்கண் வந்த ஓவும், அன்


1. பொருள் :பிணப்பறை   யறைபவர்   ஒருகால்  நீண்ட  நேரம்
அறைவர்;  பின்  சிறுபொழுது தாழ்த்து அறைவர்; இந்நிலையில்
இனிச் சாவார்  செத்தாரைச்  சுமந்து  வரப்  பிணத்துக்குரியார்
அதனை எரியூட்ட மூன்று கால்கொண்டு அமைத்த கொட்டிலில்
தீயை மூட்டிப் புறப்படுவார்; யாக்கையின் நிலைமை நன்று!

2. பொருள்; பொன்னைக் கொடுத்தாலும் பெறுதற்கரிய பெரியவரை
அவரடையும்    பயன்    இல்லாமலேயே    ஓருவன்   சேரப்
பெற்றிருந்தும்  அவரால்  பயனடையாமல்  வீணே  பொழுதைக்
கழிப்பர், நல்லறிவில்லாதவர்.