சொல்லதிகாரம் - இடையியல்156

ஆ.மொ.

இல.

The  ‘um’ of inference will not  be  followed  by ‘um’ of
negative sense in a sentence.

ஆல்.

/um/ added to a  premodifier  and /um/ used along with a
negative cannot be placed together.

இளம்.

உரை : எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும்
உடனிலை  யிலவே  என்பது-இவை   தம்முள் மயங்கி  உடன் நிற்கும்
தன்மை யில, எ-று.

வ-று : ‘சாத்தனும்    வந்தான்    கொற்றனும்   வரும்’   என்பது
எச்சவும்மை;  அதனைச்  ‘சாத்தனும்   வந்தான்.  கொற்றனும்  வரலும்
உரியன்   என  எதிர்மறை  யும்மையோடு  கூட்டிச்   சொல்லப்படாது
என்றவாறு.

சேனா.

இனி  மேற்  கூறப்பட்ட   இடைச்சொல்லின்கட்  படும்  இலக்கண
வேறுபாடு உணர்த்துகின்றார்.

இ-ள் : எச்சவும்மை  நின்ற  வழி  எஞ்சு  பொருட்  கிளவி  யாம்
எதிர்மறை உம்மைத் தொடர் வந்து தம்முள் மயங்கு தலில, எ-று.

உ-ம் :‘சாத்தனும் வந்தான் கொற்றானும்  வரலும்  உரியன்’ எனின்,
இயையாமை கண்டு கொள்க.

ஏனையும்மை    யொடு    மயங்குதல்   விலக்காராயிற்று என்னை
யெனின், அவை எஞ்சு பொருட் கிளவியவாய் வாராமையின் என்பது.

தெய்.

உம்மைக் குரியதோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : எச்சவும்மையும் எதிர்மறையும்மையும்  தத்தமுள்  மயங்கும்
உடனிலை யில, எ-று.