சொல்லதிகாரம் - இடையியல்159

எதிர்மறைப்   பொருளாகிய  வாராமையையும்,  வாராமையும் என்பதன்
உம்மை    அதன்மறையாகிய    வரலையும்     தழுவின.   அதனால்
எதிர்மறையும்மை      ஒரேதொடரில்       தம்முன்      மயங்கின.
இப்படிஎச்சவும்மையும்  எதிர்மறை உம்மையும்  ஒருதொடரில்  தம்முள்
மயங்குமேயன்றி   இரண்டும்   ஒருதொடரில்   மயங்குதல்   இல்லை.
அதாவது  ‘சாத்தானும் வந்தான் கொற்றன் வரலும்  உரியன் என வாரா
என்பதாம்.   இவ்வாறே   நச்சினார்க்கினியர்   கொண்டார்.   இதுவே
பொருந்தும்.

பால.

கருத்து : எஞ்சு  பொருட்  கிளவியாய்   முடியும்.  உம்மையிடைச்
சொல் பற்றியது ஓர் இயல்பு கூறுகின்றது.

பொருள்:ஒரு தொடரின்கண் எச்சவும்மையும் எதிர்மறையும்மையும்
தத்தமக்குள்  ஒருங்கு  மயங்குதல் இல என்றது, பாணன்  பாடுதற்கும்
உரியன்   என்புழி  எச்சப்  பொருள்  கருதிய  வழி   வாயிலாதற்கும்
உரியன் எனவும், எதிர்மறைப் பொருள்  கருதிய  வழிப் பாடாமைக்கும்
உரியன்  எனவும்  வருமன்றே.  ஆண்டு  யாதேனும்   ஒரு  பொருள்
பற்றியல்லது இரண்டு பொருளும் ஒருங்குவாரா என்றவாறாம்.

சாத்தனும்     வந்தான்  என்னும்  தொடர்  எதிர்மறைப் பொருள்
தருதற்கும்,  மறப்பினும்  ஒத்துக்  கொளலாகும்  என்னும் தொடர் பிற
எச்சப் பொருள்தருதற்கும் ஏலாமையின்  இன்னோரன்ன  தொடர்களை
நீக்கிச்   சாத்தன்   உண்ணுதற்கும்,   உரியன்   என்றாற்போல  இரு
பொருளும்  மயங்குதற்கு  ஏற்ற  தொடர்க்கண்ணது  இவ்  ஆராய்ச்சி
என்பது தோன்ற “உடனிலைஇல” என்றார்.

எச்சஉம்மை    எச்ச உம்மையொடும் எதிர்மறை உம்மை எதிர்மறை
உம்மையொடும்  மயங்குதற்கு   உரியவாகலின்  “தம்முள்”  என்னாது
அவை மாறி மயங்கா என்பது விளங்கத் “தத்தம்முள்” என்றார்.

உரையாசிரியன்மார் இரு தொடர்களைக் காட்டி விளங்கக் கூறுதலும்
அமைதி   கூறுதலும்   ஆசிரியர்   கருத்திற்கும்    நூல்  நெறிக்கும்
ஒவ்வாமை அறிந்து கொள்க.

எச்ச உம்மை நிற்கும் இடம்
  

279.

எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்            (36)