(எஞ்சு பொருள் கிளவி செம்சொல் ஆயின் பின்படக் கிளவார் முன்படக் கிளத்தல்) ஆ.மொ. இல. If the sentence which denotes inference has no ‘um’ it must not follow but precede the sentence which has ‘um’. ஆல். If it is not actually used with the words where they should. these words are placed first and not after. பி.இ,நூ. நன். 427 செவ்வெண் ஈற்றதாம் எச்சவும்மை. இல,வி, 258. எஞ்சு பொருட் கிளவி செஞ்சொ லாகில் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். இளம். உரை : எஞ்சு பொருட் கிளவி என்பது எச்சவும்மை என்றவாறு. செஞ்சொல் ஆயின் என்பது செவ்வெண்ணாயின் என்றவாறு. பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் என்பது கால முன்னாகச் சொல்லார் இட முன்னாகச் சொல்லுவார். எ-று. வ-று : ‘அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான் கடல் போலும் கல்வி யவன் என்பதனுள் அடகு புலால் பாகு என்று செவ்வெண்ணாலே எண்ணிப் பின்னைப் பாளிதமும் என்று எச்சவும்மையை இட முன்னாக்கி வைத்து எண்ணினவாறு கண்டு கொள்க. சேனா. இ-ள் : எச்சவும்மையாற் றழுவப்படும் எஞ்சு பொருட் கிளவி உம்மையில் சொல்லாயின். அவ்வும்மையில் சொல்லை |