சொல்லதிகாரம் - இடையியல்161

அவ்வும்மைத்  தொடர்க்குப் 1  பின் சொல்லாது முன் சொல்லுக, எ-று.

உ-ம் :சாத்தான்   வந்தான்   கொற்றனும்  வந்தான்  என  வரும்.
கொற்றனும்   வந்தான்  சாத்தன்  வந்தான்  எனப் பிற்படக் கிளப்பின்
முற்கூறியதனை  விலக்குவது  போன்று பொருள்  கொள்ளாமை கண்டு
கொள்க.  ‘அடகு  புலால் பாகு பாளிதமும் உண்ணான், கடல் போலும்
கல்வி யவன்’ என்பது மது.

உம்மையடாதே  தானே    நிற்றலிற்    ‘செஞ்சொல்’    என்றார்.
செஞ்சொலாயின்  முற்படக்  கிளக்க  எனவே,  எஞ்சு பொருட் கிளவி
உம்மையொடு வரிற் 2  பிற்படக் கிளக்க என்றவாறாம்.

தெய்.

எச்சவும்மைக்கண் வழூஉக் காத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் :  எஞ்சு   பொருட்   கிளவி   உம்மை இல் சொல்லாயின்
அவ்வும்மையை வருகின்ற சொல்லோடு கிளக்க, எ-று.

உ-ம் : சாத்தானும்  வந்தான்  கொற்றனும் வரும்’ என்றற் பால
தன்கண்  ஓர்  உம்மைவரின்.  ‘சாத்தன் வந்தான் கொற்றனும் வரும்’
என்க. ‘சாத்தனும் வந்தான், கொற்றன் வரும்’ என்னற்க.

நச்.

இஃது எச்ச உம்மைக்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது.

இ-ள் :  எஞ்சு  பொருட்  கிளவி- எச்சவும்மையால்  தழுவப்படும்
எஞ்சு   பொருட்  கிளவி,  செஞ்சொல்   ஆயின்  பிற்படக்  கிளவார்
முற்படக்   கிளத்தல்-உம்மைஇல்   சொல்லாயின்   அவ்வும்மை  இல்
சொல்லை   அவ்வும்மைத்   தொடர்க்குப்   பின்  சொல்லாது   முன்
சொல்லுக, எ-று.


1. பின்முன் என்பன காலப் பின்னும் கால முன்னுமாம். இளம்பூரணர்
  இடப்பின் இடமுன் எனக் கொண்டார்.

2. அடகும் புலாலும் பாகும் எனப் பிற்படவும் கிளக்க என்றவாறு.