சொல்லதிகாரம் - இடையியல்163

முற்றும்மை எச்சவும்மையாதல்
 

280.

முற்றிய வும்மைத் தொகைச் சொன் மருங்கி
னெச்சக் கிளவி யுரித்து மாகும்.                  (37)

(முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.)
 

ஆ.மொ:

இல.

The ‘um’ which denotes completeness standing at the end
of a numeral may denote in completeness also.

ஆல். 

The /um/ which  shows  inclusiveness  as  it  occur  with
numerals may even indicate exclusiveness.

பி.இ.நூ.

நேமி. சொ. 64

முற்றும்மை எச்சப்படுதலும் உண்டாம்.

நன். 426

முற்றும்மை யொரோவழி எச்சமும் ஆகும்.

இல.வி. 257 ,, ,, ,,

இளம்.

வ-று : பத்தும்   கொடான்    என்றக்கால்   எல்லாம்   கொடான்
என்றுமாம்.

1 ‘தொகைச் சொல்’ என்றதனான், எல்லாங் கொண்டாம், கொண்டார்
என்றும்; எல்லாரும் வாரார், வருவர் என்றும் கொள்ளப்படும்.

எச்சவும்மை  ஒழிவுப்பொருளை யுடைத்தானதுபோல், முற்றும்மையும்
ஒழிவுப் பொருள்பட என்று கொள்க.


1. ‘தொகைச்   சொல்   என்றதனால்    எல்லாமும்   கொண்டாம்
என்றக்கால்   சில கொள்ளவில்லையென்றும், எல்லாரும் வாரார்
என்றக்கால்    சிலர்    வருவார்   என்றும்,   கொள்ளப்படும்’
என்றிருப்பின் நன்று-சுந்தரமூர்த்தி.