எல்லாரும் தீயர்தாம்-ஆனால் சிலர் நல்லர் என எஞ்சு பொருள். முத்தமிழும் உள்ளவன்தான்- ஆயின் ஒழுக்கமில்லை-எஞ்சு பொருள். நவமணியும் வாங்கினானே-ஏதாவது வைத்திருக்கிறானா- எஞ்சு பொருள். சிவ ஆதித்தர் கூறிய பொருள் பொருத்தமுடையதன்று. முற்றும்மைத் தொகைச் சொல் என ஆசிரியர் கூறியிருத்தலின் எச்சம் என்றது அத்தொகையில் அமையுமேயன்றி வேறு பொருளில் அமையாது. எல்லாரும் வந்திலர் எனின் சிலர் வந்தார் என்னலாம். ‘முத்தமிழும் உள்ளவன்தான்’ எனின் முத்தமிழில் எச்சம் அமைய வேண்டுமே தவிர பிறிதான எச்சம் அமைவது கூடாது. ஒழுக்கம் இல்லை’ என்றதும் உம்மைக்கு யாதோர் தொடர்பும் இல்லை. அதனால் ‘கற்கறிக்க நன்கு அட்டாய்’, பல் சான்றீரே பல் சான்றீரே’ என்பன போலும் குறிப்புப் பொருளதாகும் அது. ஈற்றசை யேகாரம் ஒரு மாத்திரையாதல் |