சொல்லதிகாரம் - இடையியல்74

பி.இ.நூ :

அடுத்த சூத்திரத்துக் காண்க

இளம்.

வ-று : வினை : கொள்ளெனக் கொண்டான் என்பது.
குறிப்பு : விண்ணென விசைத்தது என்பது.
துண்ணெனத் துடித்தது என்பதும் அது.
இசை : ஒல்லென ஒலித்தது என்பது.
பண்பு : வெள்ளென விளர்த்தது என்பது.
எண் : நிலனென வளியென எனவரும்.
1பெயர் : ஊரெனப்படுவது உரையூர் எனவரும் 
நாடெனப்படுவது சோணாடு என்பதுமது.

சேனா.

இ-ள் : வினை முதலாகிய ஆறு  பொருண்மையும்  குறித்து  வரும்
என என்னும் இடைச்சொல், எ-று.

உ-ம் : “மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்” (புறம். 143) என
வினைப் பொருண்மையும்,

‘துண்ணெனத் துடித்தது மனம்’ எனக் குறிப்புப் பொருண்மையும், 

‘ஒல்லென வொலித்தது’ என இசைப் பொருண்மையும்.

வெள்ளென விளர்த்தது’ எனப் பண்புப் பொருண்மையும்,

‘நிலனென    நீரெனத்    தீயென   வளியென’  என   எண்ணும்
பொருண்மையும்,

2‘அழுக்கா   றென  வொரு  பாவி’  (குறள்  168)   எனப்பெயர்ப்
பொருண்மையும்  குறித்து  என  என்னும்  சொல்    வந்தவாறு கண்டு
கொள்க.

தெய்.

இதுவுமது.


1. இவ்வுதாரணங்களால் இளம்பூரணர்  சோணாட்டினர்  என்னலாம்
போலும்.

2. அழுக்காறென - அழுக்காறு என்னும் பெயரையுடைய