பால. கருத்து :- ஈற்றசை ஏகாரத்திற் கொரு சிறப்பு இயல்பு கூறுகின்றது. பொருள் :- சொல்லிறுதிக்கண் நின்று அசையாக இசைக்கும் ஏ என்னும் ஈற்றசை, வழக்கின்கண் ஒரு மாத்திரையளவிற்றாதலும் உரித்தாகும். உம்மையான் ஈரளவிசைத்தலே பெரும்பான்மை என்பதாம். வரலாறு :- முன்னின்றாரை நோக்கி ஒருவர் உரையாடுங்கால், கண்டேனே, பார்த்தேனே, உண்டேனே என்ற வழி கண்டேனே, பார்த்தேனெ, உண்டேனெ என இறுதிகுன்றி இசைத்தலை வழக்காற்றினான றிக. எண்ணுப் பொருள் அமையுமாறு. |