எனவே தொகை பெற்றும் பெறாதும் வரும் என்பதாம். உ-ம் : ‘உயர்திணைக்குரிமையும் அஃறிணைக் குரிமையும், ஆயிரு திணைக்கும் ஓரன்ன வுரிமையும், அம்மூவுருபின (பெய.6) எனவும், ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ (உரி.1) எனவும், ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’ எனவும், ‘உயிரென வுடலென வின் றியமையா எனவும் அவ்விருவகை எண்ணும் தொகை பெற்றும் பெறாதும் வந்தவாறு. தொகை எனப் பொதுப்படக் கூறியவதனான், எண்ணுப் பெயரே யன்றி ‘அனைத்தும்’ ‘எல்லாம்’ என்னுந் தொடக்கத்தனவும் கொள்க. தெய். எண்ணின்கட் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : உம்மையான் எண்ணப்பட்ட எண்ணும், எனவான் எண்ணப்பட்ட எண்ணும் தம்மிடத்துத் தொகை பெறுதல் நியமம் இல்லை, எ-று. உ-ம் : முத்தும் பவழமும் கொணர்ந்தான், நன்றெனத் தீதென நின்றது. ‘முத்தும் பவழமும் பொன்னும் மூன்றுங் கொணர்ந்தான்; ‘நன்றெனத் தீதென இரண்டுமாகி நின்றது’ என இருபாற்றானும் வரும். நச். இஃது எண்களுக்கு முடிவுவேற்றுமை கூறுகின்றது. இ-ள் : உம்மை எண்ணும் என என் எண்ணும் -உம்மையான் வரும் எண்ணும் எனவான் வரும் எண்ணும். தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே-தத்தம் இறுதிக்கண் தொகைச்சொல் பெறுதலை முறையாகவுடைய வல்ல, எ-று. எனவே, தொகை பெற்றும் பெறாதும் வரும் என்பதாம். உ-ம் :“உயர்திணைக் குரிமையும் அஃறிணைக்குரிமையும், ஆயிருதிணைக்கும் ஓரன்ன வுரிமையும் அம்மூவுருபின” (பெயர். 6) “இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி” (உரி 1), ‘நிலனென நீரெனத்தீயெனவலியென நான்கும், உயிரென உடலென இன்றியமையா,’ எனவரும். |