சொல்லதிகாரம் - இடையியல்172

ஆல்.

Though   the   /ē/   used    in    enumeration   appears   only   at
intervals, scholars tell us that this is sufficient for enumeration.

இளம்.

உரை :  எண்    ஏகாரம்   இடை   நின்று   ஓழிந்த எண்ணால்
வந்தனவற்றையும் ஏகார எண்ணால் எண்ணினவே, எ-று. 

ஏகாரம்  எண்ணிடையே   நின்றது   எனினும்,  எண்ணி வருகின்ற
எண்ணேயாம் என்றுமாம் எனக் கொள்க.

வ-று ; ‘தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே.
           உறலோ டாங்கைம் புலெனன மொழிப’.

இதனுள்  செவ்வெண் ஓடா நின்றே ஏகாரவெண்  இடையே புகுந்தவாறு
கண்டு கொள்க.

சேனா.

இ-ள் ; சொற்றொறும் வாராது  எண் ஏகாரம்  இடையிட்டு வரினும்
எண்ணுதற் பொருட்டாம், எ-று.

உ-ம் :‘மலை நிலம் பூவே துலாக்கோல் என்றின்னர்’ (தொல். எழுத்.
பாயிரம்)  எனவும்,  தோற்றம்  இசையே  நாற்றம்  சுவையே  யுறலோ
டாங்கைம் புலனென மொழிப’ எனவும் வரும்.

எண்ணுக் குறித்து வருவன, எண்ணப்படும் பெயர் எல்லாவற்றோடும்
வருதல் மரபாயினும் இடையிட்டு வரினும் அமைக என அமைத்தவாறு.

‘எனவும்    என்றும் ஒடுவும்’ (இடை.46) சொற்றொறும் வாராது ஒரு
வழி  நின்றும் எண்ணுக் குறிக்குமால் எனின்,  அவை  ஒரு வழி நின்று
எல்லாவற்றோடும் ஒன்றுதலின் ஆண்டு ஆராய்ச்சியில்லை யென்க.

பிற வெண் ஓடா நின்றவழி ஏகார எண் இடைவந்த தாயினும், ஓடா
நின்ற  பிறவெண்ணேயாம்  என  உரைத்தாரால் உரையாசிரியர் எனின்,
அவ்வாறு  விராய் எண்ணிய வழிப்பிற  எண்ணாற் பெயர் கொடுப்பின்
அதனை   ஏகார   எண்    என்பாரையும்   விலக்காமையானும்,  பிற
எண்ணாம்   என்றதனாற்படுவதோர்  பயனின்மையானும்   அவர்க்கது
கருத்தன் றென்க.