சொல்லதிகாரம் - இடையியல்173

தெய்.

இதுவுமது : ஏகாரத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் :  எண்ணுக் குறித்த   ஏகாரம்   சொற்றொறும்  கொள்ளாது
ஒருவழிக் கொளினும் எண்ணுக் குறித்து நடக்கும், எ-று.

உ-ம் ;‘தோற்றம் இசையே நாற்றம்  சுவையே,  உறலோ டாங்கவை
புலனென மொழிப’ என்புழி இடையிட்டு வந்தும் எண்ணுக் குறித்தது.

நச்.

இஃது எண்ணிடத்து வழு அமைக்கின்றது.

இ-ள் ; எண்-உம்மையும்  ஏகாரமும்  எனவும்  என்றும் எனாவும்
என்றாவும்  செவ்வெண்ணுமாகிய  எழுவகை  எண்களுள் ஒன்று முதல்
நின்று,    ஏகாரம்   இடையிட்டுக்    கொளினும்-ஏகார   எண்ணைத்
தன்னிடத்தே   அழைத்துக்   கொண்டு  நிற்பினும்  பிற  எண்களைத்
தன்னிடத்தே   அழைத்துக்   கொண்டு   நிற்பினும்,  எண்ணுக்குறித்து
இயலும்  என்மனார் புலவர்- பல எண்  வந்தன என்று குற்றமாக தான்
உணர்த்தும்  எண்ணுப்  பொருளையே  அப்புலவுங்  குறித்து நடக்கும்
என்று கூறுவர் புலவர், எ-று.

உ-ம் :‘மலை  நிலம்  பூவே  துலாக்கோல்  என்றின்னர் உலைவில்
உணர்வுடையார்,   தோற்றம்   இசையே  நாற்றம்  சுவையே  உறலோ
டாங்கைம்  புலனென  மொழிப’  இவை   செவ்வெண்  நின்று  ஏகார
எண்ணை இடையிட்டன.

மாத்திரை எழுத்தியல்  அசைவகை  எனா   அ’ (செய்.1)  என்பது
செவ்வெண்  நின்று எனா எண்ணை  இடையிட்டது. ‘வண்ணம் வடிவே
அளவே  சுவையே’  (வேற்.17) என்னுஞ் சூத்திரம்  செவ்வெண் நின்று
ஏகார  எண்ணையும்  ‘என்றா’  என்னும் எண்ணையும்  இடையிட்டது.
‘யாத்த  சீரே  அடி  யாப்  பெனா’  (செய்.1)   என்பது  ஏகார  எண்
செவ்வெண்ணையும்  எனாவையும்  இடையிட்டது.  ஒழிந்த  எண்களும்
இவ்வாறு வருமாறு சூத்திரங்களுள்ளும் செய்யுட்களுள்ளும் காண்க.

வெள்.

இஃது எண்ணிடத்துவருவதோர் வழு அமைக்கின்றது.