உ-ம் : ‘நிலன் நீர் தீயே வளி விசும்பு ஐந்தும்’ என்பதில் ஏகாரம் இடையில் ஓரிடத்தில் மட்டும் நிற்க எண்ணப்பட்டவாறு காண்க. இது சேனா வரையர் தெய்வச்சிலையார் கருத்து. (4) யாதேனும் ஓர் எண்ணிடைச்சொல் முன்னர் நின்று பின்னர் ஏகாரம் எனா என்றா முதலிய இடைச்சொற்களுள்ஒன்றோ பலவோ இடையிடையே பெற்று வந்தாலும் எண்ணுப்பொருள்தருவதில் தவறில்லை என்பது ஒரு கருத்து. இதில் முன்னர் உள்ள எண்ணிடைச் சொல் மற்றவற்றுடன் வந்து எண்ணுப் பொருள் தந்தது என்று கொள்ளப்படும். உ-ம்: “தோற்றம் இசையே” என்பதில் முன்னர்ச் செவ்வெண் நின்ற ஏகாரம் ஓடு ஆகியவற்றுடன் வந்து எண்ணுப் பொருள் தந்தது காண்க. இது நச்சினார்க்கினியர் கருத்து. இளம் பூரணரின் இரண்டாவது கருத்தைத் தழுவியதாகும். யாவர் உரையும் கொள்ளலாம். ஏதேனும் ஒன்று உரையெனக் கொண்டு மற்றவற்றை உத்தியால் கொள்ளலாம். எண்ணுக்குறித்தியலும் என்பதற்கு எண்ணேகாரம் என்பது எழுவாயாகச் சேனாவரையர் கொள்ள, மற்றவர் எண்ணிடைச் சொற்கள் என்பதைத் தோன்றா எழுவாயாகக் கொண்டனர். எனா, என்றா |