சொல்லதிகாரம் - இடையியல்176

பி.இ.நூ.

இல.வி. 259.

என்றா எனா ஒரு எண்ணுக்குறித்தியலும்.

இளம்.

வ.று : உம்மை தொக்க எனா என் கிளவி வருமாறு:

‘நிலனெனா   நீரெனாத் தீயெனாக் காலெனா’ எனவரும்.ஆவீறாகிய
என்றென்கிளவி:   ‘நிலனென்றா  நீரென்றா   தீயென்றா  வளியென்றா’
எனவரும்.

சேனா.

இ-ள் : உம்மை  தொக்கு  நின்ற எனா என்னும் இடைச் சொல்லும்
என்றா  என்னும்  இடைச்  சொல்லும் இரண்டும் எண்ணுமிடத்து வரும்,
எ-று.

உ-ம்:‘நிலனெனா நீரெனா எனவும் நிலனென்றா நீரென்றா எனவும்
வரும்.

‘உம்மை  தொக்க  எனா  வென்கிளவி’  எனவே,   எனாவும் என
அச்சொல்  உம்மோடு  வருதலும்   உடைத்   தென்பதாம்.  உம்மோடு
வந்தவழி அவ்வெண் உம்மை எண்ணுள் அடங்கும்.

‘எண்ணுவழிப்பட்டன’     எனவே.      அவை     சொற்றொறும்
வருதலேயன்றி இடையிட்டும் வரும் என்பதாம்.

உ-ம் :‘பின்சாரயல்புடை தேவகை  யெனா’  (கிளவி.82)  எனவும்,
‘ஒப்பிற்  புகழிற்  பழியின்  என்றா’   (கிளவி.72)  எனவும் இடையிட்டு
வந்தவாறு.

இவை  எண்ணுதற்கண்  அல்லது  வாராமை   யானும்,  ‘அவற்றின்
வரூஉம் எண்ணின் இறுதியும்’  (இடை 42)  எனச் சூத்திரஞ் சுருங்குதற்
சிறப்பினானும் ஈண்டு வைத்தார்.

தெய்.

எண்ணின்கண் வருவன சில  இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : உம்மை   தொக்க  எனவின் திரிபாகிய   எனா  என்னும்
சொல்லும்,   ஆவீறாகிய   என்று   என்னும்   சொல்லும்  எண்ணின்
கட்பட்டன.எனவும்  என்பது  எனா  எனவும்  என்று  என்பது என்றா
எனவும் வரும், எ-று.