சொல்லதிகாரம் - இடையியல்177

உ-ம் :வளி நடந்தன்ன வா அய்ச்செல் இவுளியொடு-கொடி நுடங்கு
விசைய   தேரினர்   எனா அக்-கடல்கண்டன்ன    வெண்    படைத்
தானையொடு-மலைமாறு  மலைக்கும்  களிற்றினரெனா அ’  (புறம். 167)
என்பதனுள்  எனவும்   என்பது   எனா   என்று   வந்து   எண்ணுக்
குறித்தவாறு  கண்டு   கொள்க.   ‘ஒப்பும்    உருவும்     வெறுப்பும்
என்றா-கற்பும் ஏரும் எழிலும்   என்றா’   (பொருளி-53)   என்பதனுள்
என்று என்பது ஆவொடு கூடி எண்ணுக் குறித்தவாறு கண்டு கொள்க.

நச்.

இஃது எண்ணும்மை பிற  எண்ணோடு  மயங்குங்கால் சிறந்து வரும்
என்கின்றது. 

இ-ள் : உம்மை   தொக்க    எனா    என்   கிளவியும்-முன்னர்
எண்ணும்மை  யடுக்கி  நின்ற  எனா  என்னும் இடைச் சொல்லும், ஆ
ஈறு  ஆகிய  என்று  என் கிளவியும்- முன்னர்  எண்ணும்மை  யடுக்கி
நின்ற  ஆகாரத்தை யீறாகவுடைய என்று என்னும்  இடைச்  சொல்லும்,
ஆயிரு  கிளவியும்  எண்ணு  வழிப்  பட்டன-அவ்விரண்டு  சொல்லும்
எண்ணுமிடத்தே சிறந்து வரும், எ-று.

உ-ம் :‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா’ (பொருளி-53) என்னும்
சூத்திரம்  உம்மை  தொக்க என்றாவிற்கு உதாரணம், உம்மை தொக்க
எனா வந்துழிக் காண்க. 

1 இனி  ‘உம்மை தொக்க’ என்பதற்கு ‘நிலன்  எனாவும்’ என ஈற்று
நின்ற    உம்மை   தொக்கு   ‘நிலன்    எனா’   என்றல்   வழக்கம்
இன்மையானும்,   எனாவும்  என்றாவும்   எண்ணிடைச்   சொல்லாதல்
2 மேலிற் சூத்திரத்தால் பெறப் படுதலானும் இதுவே ஆசிரியர் கருத்து.

சிவ.

‘உம்மை தொக்க’ என்பதற்கு ‘எண்ணும்மை யடுக்கி நின்ற’ எனவும்,
‘எண்ணு  வழிப்  பட்டன’ என்பதற்கு எண்ணுமிடத்தே  சிறந்து வரும்’
எனவும்  நச்சினார்க்கினியர்  பொருள் கொண்டமை  பாராட்டுக்குரியது.
பிறர்  உரையை  மறுக்க வேண்டி, “இனி உம்மை... ஆசிரியர் கருத்து”
என்றுரைத்ததும்   சிறப்புடையதே.   பிறரெல்லாரும்    ‘எண்ணுவழிப்
பட்டன’ 


1. இது சேனாவரையர்க்கு மறுப்பு.

2. மேலிற் சூத்திரம்-அடுத்து வரும் சூத்திரம் “அவற்றின்  வரூஉம்”
என்பது.