சொல்லதிகாரம் - இடையியல்179

எண்ணிடைச் சொற்களின் முடிபு வேறுபாடு
 
 

285.

அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும்
பெயர்க்குரி மரபின் செவ்வெண் ணிறுதியு
மேயினாகிய வெண்ணி னிறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா.            (42)

(அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும்
ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினும் தொகையின்று இயலா)
 

ஆ.மொ:

இல.

The  ending of counting by  those (‘enā ’ and ‘emŗā ’) the ending of nouns  with   out ‘um’ in  counting,  and  the   ending   of  ‘ē’   in counting, wherever they appear, they do not stand with out number.

ஆல்.

Wherever  these  endings  of  numerals  and naming words where such  endings  are  not  added  and enumerations with /ē / occur, they will not occur except in a series.

பி.இ.நூ.

நன். 428.

பெயர்ச் செவ் வெண்ஏ என்றா எனா எண்
நான்கும் தொகை பெறும் உம்மை என்று என ஓடு
இந்நான்கு எண்ணும் அஃதின்றியும் இயலும்.
 

இல.வி. 260 

பெயர்ச் செவ் வெண்ஏ என்றா எனா எண்
நான்கும் தொகை பெறும் உம்மை என்று என ஓடு
இந்நான்கு எண்ணும் அஃதின்றியும் இயலும்.

தொன். 136.

எண் வகை எட்டனுள் செவ்வெண் என்றா
எனா நான்கும் தொகைபெறும் என ஒடு உம்மை
நான்கும் தொகாமை நடக்கவும் பெறுமே
என்று என ஒடு மூன்றும் எஞ்சிடத் தனவுமாம்.  

இளம்.

வ-று : ‘சாத்த  னெனா  கொற்றனெனா  பூதனெனா  அம்மூவரும்
வந்தார்’ என,  எனா  என்னும் எண்ணின் இறுதிக் கண் மூவரும் எனத்
தொகை கொடுத்து எண்ணினவாறு கண்டுகொள்க.