சொல்லதிகாரம் - இடையியல்181

       பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ
       முன்னம் பொருளே துறைவகை யெனாஅ
       மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்
       ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும் (செய் 1)

எனவும்,

“அவைதாம்
பெயர்ச்சொல் என்றா வினைச் சொல் என்றா
இரண்டன் பாலா இயங்குமன் பயின்றே”

எனவும்,

“படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”                (குறள். 381)

எனவும்,

“தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
ஈற்றசை யிவ்வைந்தேகா ரம்மே”             (இடை 9)

எனவும் எண் தொகை பெற்றவாறு கண்டு கொள்க.

‘கண்கால்     புறமகம்’ (வேற். 20) என்னும் சூத்திரத்துள் எனாவும்.
‘ஒப்பும்  உருவும்’  (பொருளி.  53) என்னும் சூத்திரத்துள்  என்றாவும்,
‘நிலப்  பெயர் குடிப்பெயர் (பெய.11)  என்னுஞ் சூத்திரத்துள் ஏகாரமும்
தொகை  பெற்றிலவால்   எனின்  அவை  ‘அன்ன  பிறவும்’  எனவும்
‘கிளவி   யெல்லாம்’   எனவும்,   ‘அனைத்தும்’   எனவும்  தொகைப்
பொருண்மை தோன்ற வந்தன.

‘செல்ல  லின்னா லின்னா மையே’ (உரி. 7) என்பதன் கண்தொகை
பெற்றின்றா    லெனின்,    ‘யாவயின்    வரூஉம்’    என்றமையால்,
தொகையின்றிவரினும்  அப்பொருளுரைக்குங்கால் தொகையின்றியியலா
எனக் கொள்க.

உடம்பொடு புணர்த்தல்  என்றதனான்  எண்ணேகாரம்  இடையிட்டு
வருதலேயன்றி எனாவும் என்றாவும் இடையிட்டு வருதலும் கொள்க.

நச்.

இஃது எண்ணிடைச் சொற்கட்கு முடிவு வேற்றுமை கூறுகின்றது.

இ-ள் :  அவற்றின்  வரூஉம் எண்ணின் இறுதியும்-முற்கூறிய எனா
என்றா  என்பன  வற்றான்  வரும்  எண்ணுச்  சொற்களின் இறுதியும்,
பெயர்க்கு உரிமரபிற் செவ்வெண் இறுதியும்,