சொல்லதிகாரம் - இடையியல்184

ஆல்.

When  /um/  appears  in  enumeration  it is not forbidden to make the case marker disappear.

பி.இ.நூ.

நன். 427

செவ்வெண் ஈற்றதாம் எச்ச வும்மை.

தொன். 135

.........செவ்வெண்
ஈற்றின் வேண்டும் எச்ச வும்மை.

இளம்.

வ-று :  ‘யானையும்   தேரும்    ஆளும்    எறிந்தார்’   என்பது
‘யானையையும் தேரையும்  ஆளையும்  எறிந்தார்’  என்றவாறு. உம்மை
யெண்ணின்கண் உருபு தொக்கவாறாயிற்று.

சேனா.

இ-ள்: உம்மை  யெண்ணின்கண் உருபு தொகுதல்  வரையப்படாது,
எ-று.

பிறிதுபிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப       (வேற். ம. 19)
 

என்னும்   பொது  விதியான் ‘உம்மை யெண்ணின்கண்  உருபு தொகல்
பெறப்பட்டமையால் பெற்றதன் பெயர்த்துரை நியமப்  பொருட்டாகலான்,
உம்மை    யெண்ணின்   உருபு  தொகல்  வரையப்படாது;     ஏனை
யெண்ணின்கண்  அவை  வரையப்படும்  என   நியமித்தல்   இதற்குப்
பயனாகக் கொள்க.

1’குன்றி  கோபம்  கொடிவிடு  பவளம், ஒண் செங் காந்தள் ஒக்கும்
நின்னிறம்’ எனப்  பிற  எண்ணின்கண்   உருபு  தொக்கதால்   எனின்
அற்றன்று;   செவ்வெண்   தொகையின்றி   நில்லாமையின்  (இடை.42)
அவற்றையென  ஒருசொல் விரிக்கப்படும். விரிக்கவே குன்றி முதலாயின
2எழுவாயாய் நின்றனவாம் என்பது.


1. குன்றி கோபம் பவளம்  காந்தள்  ஆகிய  அவற்றை  நின்னிறம்
  ஒக்கும் என்க.

2. எழுவாய் என்றது ‘ஆகிய அவற்றை’ என்பதில் ஆகிய என்பதை
  நோக்கியெனக் கொள்க. அவற்றை என்பதை நோக்கின் செயப்படு
  பொருளாம்.