உ-ம் ; நீர்க் கோழி கூஉப் பெயர்க் குந்து’ (புறம்.395) எனவும், ‘நாரரி நறவின் நாண் மகிழ்தூங் குந்து, (புறம் 400) எனவும் வரும். வினை செயல் மருங்கிற் காலமொடு வரும் உம் என்பது ஏற்புழிக் கோடல் என்பதனாற் பெற்றதாம். ‘இடனுமா ருண்டே’ யென்றது, இத்திரிபு பெயரெச்சத் திற்கீறாய வழி யென்பது கருதிப் போலும். 1 தம்மீறு திரிதல்’ (இடை.3) முதலாயின இவ்வோத்தினுட் கூறப்படும் இடைச் சொற்கே யென்பது இதனானும் பெற்றாம். வினையியலுள்ளும் கூறப்படுமாயினும் இடைச்சொல் திரிபாகலான் ஈண்டுக் கூறலும் இயைபுடைத்து என்பது. தெய். இதுவுமது. இ-ள் ; உன் என்பது உந்து என விரிந்து நிற்கவும் பெறும் இடமும் உண்டு, எ-று. உ-ம்: 2“நெல்லரியும் இருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயில்முனையின் தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து திண்டிமில் வன்பரதவர்
1. புணரியல்களிற் கூறப்படும் பெயர் வினைச் சொற்களின் ஈறுதிரிதலும் விளி மரபில் கூறப்படும் விளி காரணமாகப் பெயர்ச் சொல் ஈறு திரிதலும் ஆகியவை யின்றி இவ்வியலில் இடைச்சொற்களுக்கே தம்மீறுதிரிதில் கூறப்பட்டது என்பது, செய்யும் என்னும் உம்மீற்று வினைச் சொற்கு வினையியலில் திரிபு விதி கூறிய இடத்தே (பெய.41) கூறாமல் உம் என்னும் விகுதியிடைச் சொல் உந்தாகும் என இவ்வியலிற் பிரித்துக் கூறியதனாலும் பெற்றதாம். 2. பொருள் ; நெல்லை யரியும் பெரிய உழவர் செஞ்ஞாயிற்றினது வெயிலை வெறுப்பின் தெளிந்த கடற்றிரையின் மேலே பாயும் - திண்ணிய திமிலையுடைய வலிய நுளையர் `வெம்மையையுடைய மதுவை யுண்டு மெல்லிய குரவைக் கூத்திற்கு ஏற்ற தாளத்தை யாடும் கடல் துவலையாலே தழைத்த தேன் பரந்த புன்னை யினது மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட |