வெப்புடைய மட்டுண்டு தண்குரவைச் சீர் தூங் குந்து தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் முண்டகக் கோதை யொண்டொடி மகளிர் இரும்பனையின் குரும்பைக்கும் பூங்கரும்பின் தீந்சாறும் ஓங்குமணற் குலவுத்தாழைத் தீநீரோ டுடன்விராய் முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையுள் நல்லூர் கெழீஇய” (புறம். 24) என்ற வழி உம் உந்தாயிற்று. எண்ணும்மை அதிகாரப்பட்டு வருதலான், இவ்வாறு வருவது ஓர் பொருள் மேல் உம்மையடுக்கிய வழி என்று கொள்க. ஈண்டு எண்ணும்மை யாங்கதெனின், ஒரு பொருள் மேல் பல வினைச்சொல் வருதலின் அவை ஒரு முகத்தான் எண்ணப்பட்டவாம். நச். இஃது உன் என்னும் இடைச்சொல் திரியும் என்கின்றது. இ-ள் ; உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே-வினை செயல் மருங்கின் காலமொடு வருவனவற்றுள் உம் ஈறு உந்தாய்த் திரிதலும் உடைத்து, எ-று. மாலையைச் சூடிய ஆடவர் விளங்கிய வளையை யுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும்-வண்டு மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்துக் கடல் முள்ளிப் பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையை யணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும் உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும் - பரிக்கவொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்ல ஊர்கள் பொருந்திய” |