சுப். இச்சூத்திரம் எண்ணும்மையைப் பற்றிக் கூறும் சூத்திரத்திற்குப் பின்னர் இருப்பினும், ஏற்புழிக் கோடலால் செய்யுமென் வாய்ப்பாட்டு நிகழ்கால வினைமுற்றினதும் பெயரெச்சத் தினதும் விகுதியாகிய உம்மையைக் கொள்ளல் வேண்டும் என்பது ‘வினை செயல் மருங்கிற் கால மொடு வந்தது’ என்ற உரையாசிரியர் வாக்கியத்தாலும், அவர் கூறும் ‘நீர்க் கோழி கூஉப் பெயர்க்குந்து’ என்ற உதாரணத்தாலும் விளங்கும். முற்று வினை கொண்ட அவ்வுதாரணத்தைச் சேனா வரையரும் நச்சினார்க்கினியரும் காட்டுதலின், ‘இடனுமா ருண்டே என்றது இத்திரிபு பெயரெச்சத்திற்கீறாய வழி யென்பது கருநிறப் போலும் என்ற சேனாவரையந்துக் காணப்படும் வாக்கியமும் ‘இடனுமாருண்டே யென்றதனால் இத்திரிபு பெயரெச்சத்திற்கே கொள்க’ என்ற நச்சினார்க்கினியத்துக் காணப்படும் வாக்கியமும் நன்னூல் படித்தோரால் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும். சிவ. உம் உந்து எனத் திரியும் இடமும் உண்டு. அவ்விடம் செய்யுளிடம் என்று கொள்க. செய்யுளிலும் பலர் பாற் படர்க்கையிடமும் கொள்க. பலர்பாற் படர்க்கைக்குச் செய்யும் என்னும் முற்று வாராது. ஆனால் செய்யுளிடத்து வருதலும் உண்டு. அவ்வாறு வரும் போது உம் உந்து எனத் திரியும் ‘நெல்லரியும் இருந்தொழுவர் ‘ என்னும் புறப்பாடலில், (44) ‘தொழுவர் கடற்றிரை மிசைப் பாயுந்து (பாய்வர்) எனவும் ‘வண்பரதவர் சீர் தூங்குந்து’(சீர் தூங்குவர்) எனவும், ‘மைந்தர் தலைக்கை தரூஉந்து’ (தருவர்) எனவும் உம் உந்தாகத் திரிந்து படர்க்கைப் பெயர்க்கு வினை முற்றாக வந்தவாறு கண்டு கொள்க. நீர்க் கோழி கூஉப் பெயர்க்குந்து (புறம். 395) என அஃறிணைப் படர்க்கைக்கும் வந்தவாறு காண்க. இச்சூத்திரத்தில் பலர் பாற் படர்க்கையைக் கருதியே இலக்கணம் கூறப் பட்டது. உரையாளர்கள் சேனா வரையரும் நச்சினார்க்கினியரும், புறநானூற்றுப் பழைய உரைகாரரும் செய்யும் என்னும் வாய், பாட்டுப் பெயரெச்சம் அவ்வாறு நின்றது என்பர். செய்யும் என்னும் எச்சம், தான் கொண்டு முடியும் பெயர் அணிமையில் இல்லாமல், இடையே வேறு வேறு பொருளுடன் அவ்வெச்சமே |