அடுக்கி வந்து நெடுந் தொலைவில் உள்ள பெயரைக் கொள்ளுதல் பொருந்தாது. நெடுநீர் நிறை கயத்து’ என்னும் புறப்பாட்டில் (386) 1”வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் பின்று புறவே, புல்லருந்து பல்லாயத்தான் வில்லிருந்த வெங் (குறும்பின்று) கடலே, கால்கந்த கலன்எண்ணுவோர் கானற் புன்னைச் சினையலைக்குந்து கழியே, சிறுவெள்ளுப்பின் கொள்ளை சாற்றிப் பெருங்கல் நாட்டு உமண நலிக் குந்து அன்ன நன்னாட்டுப் பொருநம் யாமே!” எனவருவதில் பூத்ததும்பின்று, குறும்பின்று என்பன பூத்ததும்பியது, குறும்பினதாயிற்று என முற்றுப் பொருள் வர, அவற்றுடன் சேர்த்து எண்ணப்படும் அலைக்குந்து நலிக்குந்து என்பன மட்டும் செய்யுள் என்னும் பெயரெச்சமாக வந்தன என்பது பொருந்தாது. ‘டாக்டர் மோ. இசரயேல் என்பார் உம் உந்தாகும் சொற்களை வினையாலணையும் பெயராகக் கொள்ளலாம் என்பர். அதற்குதாரணமாக
1. பொருள் ; வயல்கள் நெல்லையே வேலியாகக் கொண்ட நீண்ட கரும்பின் பாத்தியில் பல நீர்ப்பூக்கள் நிறைந்திருக்கும்; காடுகள் புல்லை யருந்தும்பல ஆநிரைகளோடு வில்லேந்தி வீரர் காக்கும் கொடிய சிறு காடுகளையுடைவாகும். கடலானது கரையில் இருந்து கொண்டு காற்றால் தள்ளப்பட்டுக் கரை சேரும் கப்பல்களை எண்ணுவோரால் கழிக் கானலிடத்துப் புன்னைப் பூங்கொத்துகள் உதிர்ந்து விழும்; கழியிடங்கள் சிறிய வெள்ளிய உப்பை விலை கூறி விற்கும் உமணரின் ஆரவாரத்தால் நிறைந்திருக்கும் நாங்கள் அத்தகைய சோழவளநாட்டுப் பொருநர் ஆவோம்! |