சொல்லதிகாரம் - இடையியல்195

1 “மீனொடுத்து நெற்குவைஇ
யிசையம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவை இய கறிமூடையாற்
கலிச்சும்மை கரைகலக்குந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித் தோணியாற் கரை சேர்க்குந்து
மலைத் தாரமும் கடற்றாரமும்
தலைப் பெய்து வருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி”             (புறம்.345)

என்னும்  பாடலில்  மறுக்குந்து,  கலக்குந்து,  சேர்க்குந்து  என  வரும்
சொற்களுக்கு,     மறுக்குவது      கலக்குவது,     சேர்ப்பது    என
வினையாலணையும்  பெயர்ப்  பொருளைத்  தருவர். உம்  உந்தா வது
வினையாலணையும் பெயர்ப்  பொருளில்  வருமிடத்தாம் என்பது அவர்
கருத்து.  அப்படியாயின் ‘நெடுநீர் நிறையகத்து’  என்னும்  புறப்பாடலில்
பூத்ததும்பின்று    குறும்பின்று   என்பன   வற்றைப்   பூத்ததும்புந்து,
குறும்புந்து என்னாமல் ஓன்றன்பால் வினைமுற்றாகவே ஓதுவதேன்?

இனிப்   பூத்ததும்பின்று என்பது போல்வனவற்றைப்  பூத்ததும்பியது
என்பது  போல்வனவாகக் கொண்டு வினையாலணையும்  பெயர் எனக்
கொள்ளலாமே  எனின்  அவ்வாறு  வழக்கில்லை.  ‘வந்தது  சென்றது’
என்னுமிடத்தில் ‘வந்தது’


1,  இடையும் உரியும் (பக்.  69-83) சர்வோதய இலக்கியப் பண்ணை
32/1 மேல வெளியீதி, மதுரை.

1. பொருள் : மீன்களை  விற்று  அதன்   விலைக்குப்  பதிலாகப்
பெற்றநெற்குவியல்களால்   வீடும் உயர்ந்த தோணிகளும் எனப் பிரித்து
அறிய   முடியாதபடிக்  காண்பாரை  மயங்கச்   செய்யும்   மனையில்
குவிக்கப்பட்ட    மிளகு    மூட்டைகள்    ஆர்ப்பரிக்கின்ற    கடற்
கரையினின்றும்  பிரித்து  அறிய  முடியாதபடிக்  காண்பாரை  மயங்கச்
செய்யும்     மனையில்     குவிக்கப்பட்ட    மிளகு     மூட்டைகள்
ஆர்ப்பரிக்கின்ற   கடற்   கரையினின்றும்  பிரித்தறிய   முடியாதபடிக்
காண்பாரை மயங்கச் செய்யும்; கலங்கள் கொண்டு வந்த  பொன்னாகிய
பொருள்கள்  கழிகளில் இயங்கும் தோணிகளால்  கரை  சேர்க்கப்படும்;
மலைபடு   பொருளும்   கடல்படு  பொருளும்  கலந்து   இரவலர்க்கு
அளிக்கின்ற   தண்ணீர்   போலக்    கள்ளை   மிகுதியாக   வுடைய
பொன்மாலை   யணிந்த   குட்டுவனுடைய  முழங்குகின்ற   கடலாகிய
முடிவை யுடைய முசிறி.