1 “மண்டில மழுங்க மலைநிறங் கிளர வண்டின மலர்பாய்ந் தூத மீமிசைக் கண்டற் கானற் குருகின மொலிப்ப” (அகம். 260) என வினையொடு கூடிச் செவ்வெண் வந்தவாறு. ‘நினையல் வேண்டும்’ என்பது, அவ்வெண்கள் எல்லாம் தொகை பெற்றே நடக்கும் என்றவாறு. ‘சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான் அம்மூவரும் வந்தார். அம்மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது’ எனத் தொகை பெற்று வந்தவாறு. சேனா இ-ள் ; வினையொடு நிற்பினும் எண்ணிடைச் சொற்கள் தன் நிலையிற் றிரியா; அவற்றொடு வருங்கால் அவற்றவற் றியல்பு ஆராய்தல் வேண்டும், எ-று. உ-ம் ; ‘உண்டுந் தின்னும் பாடியும் வந்தான், எனவும், ‘உண்ண வெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும் வரும். ஓழிந்த வெண்ணொடு வருவன வுளவேற் கண்டு கொள்க. பெரும்பான்மையும் பெயரோ டல்லது எண்ணிடைச் சொல் நில்லாமையின் அதனை முற்கூறி, சிறுபான்மை வினையொடு நிற்றலு முடைமையான் இதனை ஈண்டுக் கூறினார். ‘நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே’ யென்றதனான் எண்ணிடைச் சொல் முற்றுச் சொல்லும் பெயரெச்சமும் பற்றி வாரா தென்பதூஉம், வினையெச்சத்தோடும் ஏற்பன வல்லது வாராவென்பதூஉம், ஆண்டுத்தொகை பெறுதல் சிறுபான்மை யென்பதூஉம், கொள்க. ‘சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான் என மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது’ என முற்றுச் செவ்வெண் தொகை பெற்று வந்த தென்றாரால் உரையாசிரியர் எனின், அவை எழுவாயும் பயனிலையுமாய்
1. பொருள்; ஞாயிற்று மண்டிலமும் ஓளி மழுங்கும்படி மலைகள்நீல நிறத்தால் விளங்க, வண்டுக்கூட்டம் மலர்களிற் பாய்ந்து தாது ஊத, மேன்மேல் எழுந்து தாழைகளுள்ள கடற் கானலில் நாரைக்குருகுகள் ஓலிப்ப |