சொல்லதிகாரம் - இடையியல்199

அமைந்து    மாறுதலின்  எண்ணப்படாமையானும்,  மூவரும்  என்பது
சாத்தன் முதலாயினோர் தொகையாகலானும் அது போலியுரை யென்க.

தெய்.

இதுவுமது,

இ-ள் ;  மேற்   சொல்லப்பட்ட   எண்ணின்   வேறுபாடெல்லாம்
வினையோடு  நிற்பினும்  எண்ணு  நிலை திரியா; ஆண்டு  அவற்றவற்
றியல்பு ஆராய்தல் வேண்டும், எ-று.

எனவே ஓரு முடிபுடைய வல்ல; தொகை பெற்றும் பெறாதும் வரும்
என்றவாறாம்.

உ-ம் ; 1 “வளிநடந் தன்ன வாய்ச்செல் லிவுளியொடு
           கொடி நுடங்கு மிசைய தேரின ரெனாஅக்.
           கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு
           மலைமாறு மலைக்கும் களிற்றின ரெனா அ
           உருமுரன் றன்ன வுட்குவரு முரசமொடு.
           செருமேம் படூஉம் வென்றிய ரெனா அ
           மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
           வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே” (புறம்.197)

என்புழி வினைக்குறிப்பு  எண்ணி  வந்து  தொகை  பெறாது  நின்றது,
“நாணாமை  நாடாமை  நாரின்மை  யாதொன்றும்   பேணாமை பேதை
தொழில்”  (குறள்.832)  இதுவும்  தொகை  பெறாது   வந்தது. தொகை
பெற்று வந்தன வந்த வழிக் கண்டு கொள்க.


1. பொருள் ; காற்று   ஓடுமாப்    போலே       விரைந்தோடும்
குதிரைகளோடு மேலே கொடியசையும்  தேருடையர்  என்றும், கடல்
போல் பரந்த சிறந்த படைகளையுடயை சேனைகளொடு  மலையொடு
மாறுபட்டுப் பொரும்  களிறுகளையுடையர்  என்றும், இடி இடித்தால்
ஒத்த   அஞ்ச   வருகின்ற  ஓசையுடைய  முரசங்களுடன் போரில்
மேம்படும் வெற்றியினையுடையர்  என்றும் இப்படியாக   நிலத்துப்
பொருந்திய சேனை யுடைய அழகிய பூண் அணிந்த  வேந்தர்களின்
வெண்குடைச் செல்வத்தை வியந்து போற்றுதல் இல்லேம்.