சொல்லதிகாரம் - இடையியல்201

ஆ.மொ:

இல.

Though  ‘ enŗu’,  ‘ena’,  and  ‘ou’  may  appear  only at the  end in
counting, they are to be supposed to stand at each word of counting

ஆல்.

 enŗu , ena, ōtu may apper in one place enumeration; they may even be distributed.

பி.இ.நூ.

நன். 429.

என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி
நின்றும் பிரிந்தெண் பொருள் தொறும் நேரும்

இல.வி. 261

என்றும் எனவும் ஒடுவும் தோன்றி
ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே.

இளம்.

வ-று ; “உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென்று ஆயிரண்
டென்ப” (தொல்.புணரி.15)

என்புழி என்று என்பதனை முன்னுங் கூட்டியுரைக்க.

“கண்ணிமை நொடியென  வவ்வே  மாத்திரை”  (நூன்.  7) என்புழி
என என்பதனை முன்னுங் கூட்டி யுரைக்க.

“நிலனே நீரே தீயே வளியே
 ஆகா யத்தோ டைந்தே பூதம்”

என்புழி ஒடுவினை எங்கும் கூட்டியுரைக்க.

சேனா.

இ-ள் : என்றும்  எனவும்   ஒடுவும்  என்பன  ஒருவழித் தோன்றி
எண்ணினுட் பிற. வழியும் பிரிந்து சென்று ஒன்றும் இடம் உடைய, எ-று.

உ-ம் :“வினை பகை யென்றிரண்டின் எச்சம்” (குறள் 674) எனவும்,
‘கண்ணிமை  நொடி  யென’ (நூன்.7) எனவும்,  பொருள் கருவி காலம்
வினையிடனோ டைந்தும்’ (குறள்