675) எனவும், அவை ஒருவழி நின்று, ‘வினையென்று பகையென்று’ எனவும், ‘கண்ணிமையென நொடியென’ எனவும், ‘பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு இடத்தொடு’ எனவும் நின்றவிடத்துப் பிரிந்து பிறவிழிச் சென்று ஒன்றியவாறு கண்டு கொள்க. ‘ஒன்றுவழியுடைய என்றதனால் சொற்றொறு நிற்பதே பெரும்பான்மை யென்பதாம். சொற்றொறு நின்றவெண் இக்காலத்தரிய, ஒடு வென்பதோர் இடைச்சொல் எண்ணின் கண் வருதல் இதனாற் கொள்க. 1 இவை மூன்றும் பொருளிற் பிரிந்து எண்ணின் கண் அசையாய் வருதலுடைய வென்பது உரையாசிரியர்க்கும் கருத்து என்பாரும் உளர். அசைநிலையென்பது இச் சூத்திரத்தாற் பெறப்படாமையானும், ‘கண்ணிமை நொடி’ (நூன்.7) என்னுஞ் சூத்திரத்து ‘என’ வைக் கண்ணிமை யென்பதனோடும் கூட்டுக என்றுரைத்தாலனும் அவர்க்கது கருத்தன்றென்க. தெய். இதுவும் எண்ணின் கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்; என்றும் எனவும் ஒடுவும் எண்ணினுட் பிரிந்து ஒரு வழித்தோன்றி எல்லாப் பெயரொடும் ஒன்றும் நெறியுடைய, எ-று. இதனானே ஒடு என ஓர் இடைச்சொல் கூறியவாறும் ஆயிற்று. உ-ம் : இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (எச்ச.1) எனவும். “யாகா பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆயேழ் சொல்லும்” (இடை.30) எனவும், “பொருள் கருவிகாலம் வினையிடனோடைந்தும் இருள் தீர எண்ணிச் செயல்” (குறள் 675)
1. இக்கருத்து இளம் பூரணத்தில் இல்லை. உரையாசிரியர் என்பார் இளம்பூரணர் அல்லர் என்பதற்கு இதுவும் ஓர் சான்று. |