சொல்லதிகாரம் - இடையியல்204

(அவ்அச் சொல்லிற்கு அவை அவை பொருள்என
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே.)
  

ஆ.மொ:

இல.

Though   the  sense  of  each  morpheme  is  described   here   in
accordance  with  its nature and though they may change in form  and
sense  when appearing with verbs and nouns you must have them all
after knowing their true nature.

ஆல்.

Though it is deseribed  here which morpheme makes which  sense
they  should  be  carefully  delineated if they appear along with verbs
and nouns in a diflerent way.

பி.இ.நூ.

இல.வி.278

அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த வியல வாயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே.

இளம்.

மேல் ஓதப்பட்ட  சொற்கள்  கூறப்பட்ட  இலக்கணத்தவன்றிப்  பிற
பொருள்பட்டு வருபவுளவேனும் கொள்க.

வ-று :1சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 46) என்புழி
ஓகாரம் ஈற்றசையும் ஆயிற்று.

2’கலங் கொண்டன கள்ளென்கோ
 காழ்க் கொண்டன சூடென்கோ’

என ஓகாரம் எண் ஓகாரம் ஆயிற்று,


1. பெரும! நீ செல்; நின்னைத் தடுப்பார் யார்?

2. கள் கலம் நிறைந்தன என்பேனா, நெற்கதிர் முற்றின என்பேனா