1’ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம். 273) மா முன்னிலையசைச் சொல்லாயிற்று வியங்கோட்கு ஓதிய அசைச் சொல். ‘அதுமன் கொண்கன் தேரே’ என்புழி மன் அசைச் சொல்லாயிற்று. சேனா. இ-ள் : மேற்கூறப்பட்ட இடைச் சொற்கள், அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென நிலைபெறச் சொல்லப் பட்ட இயல்பைபுடையன வாயினும், வினையொடும் பெயரோடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வரினும் ஆராய்ந்து கொள்க, எ-று. எனவே, கூறிய முறையான் வருதல் பெரும்பான்மையென்றும், வேறுபட வருதல் சிறுபான்மை யென்றும் சொல்லிய வாறாம். ‘வினையொடும் பெயரொடும்’ என்றது அவை வேறு பொருளவென் றுணர்த்துதற்குச் சார்பு கூறியவாறு. உ-ம் : ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம் 46) எனவும், ‘கலங் கொண்டேன் கள்ளென்கோ காழ்கொற்றன் சூ டென்கோ, எனவும் ஓகாரம் ஈற்றசையாயும் எண்ணாயும் வந்தது. ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம். 273) என மா முன்னிலை யசைச் சொல்லாயிற்று. ‘அதுமற் கொண்கன் தேரே’ என மன் அசைநிலையாயிற்று. பிறவும் அன்ன. ‘செய்யுளின்பம் நோக்கி வினையொடும் பெயரொடும்’ என்றார். தெய். எடுத்தோதப்பட்ட இடைச் சொற்கெல்லாம் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.
1. தோழி! தலைவன் தேர் மணியோசை வருவதைக் கேட்க. |