சொல்லதிகாரம் - இடையியல்210

ஆல்.

If  others  that are  not mentioned here appear, their nature must
be understood form what are mentioned here.

பி.இ.நூ:

இல,வி. 279

கிளந்த வல்ல அன்ன பிறவும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.

இளம்.

இச்சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்   இவ்வோத்திற்   கெல்லாம்
புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

உரை : இது மேற்சொல்லப்பட்டன அன்றி வரும் இடைச் சொல்லும்
கொள்ளப்படும் எ-று.

அவை; காரம், கரம்,  கான்,  ஆனம், ஏனம், ஓனம் எனவும்; மாள,
மன், மார், ஆர், தெய்ய எனவும் வரும்.

புறனடை  யென்பது  நூலுள்ளே   தொகாதனவற்றைப்  பாதுகாத்து
நூற்குமுற்றாகாமை உணர்தற் பொருட்டாக வைத்து உரைப்பது.

ஏழாவது இடையியல் முற்றிற்று.

சேனா.

இ-ள் : மேற்சொல்லப்பட்டனவன்றி, அவைபோல்வன  பிறவரினும்,
அவற்றைக் கிளந்த சொல்லின் இயல்பான் உணர்ந்து கொள்க, எ-று.

கிளந்தவற்றியலான்   என்றது,    ஆசிரியர்     ஆணையானன்றிக்
கிளந்தவற்றையும்   இன்னவென்றறிவது   வழக்கினுட்  சார்பும் இடமும்
குறிப்பும்   பற்றியன்றே?   கிளவா   தவற்றையும்  அவ்வாறு  சார்பும்
இடமும்   குறிப்பும்   பற்றி  இஃதசைநிலை,  இஃதிசை   நிறை,  இது
குறிப்பால் இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க என்றவாறு.

உ-ம் ;  ‘சிறிது தவிர்ந்தீக மாள நின் பரிசிலர் உய்ம்மார்’  எனவும்
‘சொல்லென்தெய்ய   நின்னொடு   பெயர்ந்தே’   எனவும்,  ‘அறிவார்
யாரஃதிறுவுழி  யிறுகென’  எனவும்,  ‘பணியுமாம்  என்றும்  பெருமை’
(குறள் 978) எனவும், ஈங்காயினவால்