சொல்லதிகாரம் - இடையியல்213

ஆ   என்பது   வியப்பு   உள்வழியும்   மறுத்தல்    உள்வழியும்
பொருளுணர்த்துதலும்,   ஐ  என்றது,  இசையுள்  வழியும்   வருத்தம்
உள்வழியும் பொருள் உணர்த்துதலும் கொள்க.

பொள்ளென, பொம்மென,  கதுமென-இவை  விரைவு  உணர்த்தின.
கொம்மென   என்பது  பெருக்கம்  என்னும்  குறிப்பு   உணர்த்திற்று.
ஆனம்  ஏனம்  ஓனம்  என்பன   எழுத்துச்  சாரியை.  ‘எப்பொருள்
எத்தன்மைத்  தாயினும்’  (குறள்.  355)  எனவரும்   எகர  வினாவும்
கொள்க. அங்கு இங்கு உங்கு எங்கு என  எழுத்தினுள் ‘இடப் பொருள்
உணர்த்தும்’  என்றனவும்,  இவை   நீண்டு  வருவனவும் பிறவாற்றான்
வருவனவும் இதனாற் கொள்க.

இடையியல் முற்றும்

ஆதி.

இங்கு சொல்லப்படா வேறு  இடைச் சொற்கள் காணினும் அவற்றை
இங்கு கூறிய முறையில் அறிந்து தெளிந்து கொள்க.

இற்றைநாள் வழக்கில் ஆ பெரிதும் கொள்கிறோம். ஆ வினாவாகக்
கூறிய  ஆசிரியர்  (நூன்.32)  இடைச்  சொல்  வரிசையில்  அதனை
அறவே ஒழித்து விட்டார்.

அவன் வந்தானா?-வினா
அவனுமா திருடினான்!-வியப்பு
நீயாழாவாசிக்கிறாய்-இழிவு, எதிர்மறை
ஆ ஆ என்றே ஆர்த்தார்-இசை நிறை
ஆ என்றலறியழுதார்-ஒலிக்குறிப்பு

இவ்வாறு  இற்றை  நாள்  வழக்கில்   புதிய   சொற்கள்  பலவுள,
ஆசிரியர் கூறாத முந்து இலக்கியச் சொற்களும் பலவுள.

முற்றியது.

பால.

கருத்து ; இவ்வியலுக்காவதொரு புறனடை கூறுகின்றது.

பொருள்; மேற்கிளந்து கூறப்பெற்றவையன்றி வேறு பிரிவாக இடைச்
சொற்கள்   தோன்றிவரினும்  மேற்கூறப்பெற்ற  இலக்கண   நெறியான்
அவற்றைத் தெரிந்தமைத்துக் கொள்க.

கிளந்த      இயல்பாவது.      பெயரொடும்      வினையொடும்
நடைபெற்றியலுதலும்,    வினையொடும்    பெயரொடும்     நிலையத்
தோன்றித் திரிந்து வேறுபட வருதலுமாம்,