சிவ. அவனைத் திருநெல்வேலியில் வச்சு (வைத்து)க் கண்டேன்-வச்சு (வைத்து) என்பது அசை நிலை. திருநெல்வேலி, மதுரை மாவட்ட வழக்கு. மருத்துவர் வரக்கண்டி நோய் குணமாயிற்று-கண்டி என்பது அசைநிலை-வடார்க்காடு மாவட்ட வழக்கு. ‘நீ வர சொல்ல அவனையும் அழைத்துவா-சொல்ல என்பது பொழுது என்னும் பொருள் தருவது. வடார்க்காடு மாவட்ட வழக்கு. ‘வே இங்கே வாரும்’-வே, ‘அம்ம போலக் கேட்பிக்கும் சொல்-திருநெல்வேலி மாவட்ட வழக்கு. பிள்ளைவாள், முதலியார்வாள்-‘வாள்’ உயர்வு குறித்த இடைச் சொல். இது ‘ஆள்’ என்பதன் திரிபாகவும் கொள்ளலாம். உலக வழக்கில் வரும் பிற இடைச் சொற்களும் கொள்க. இடையியல் உரைவளம் முற்றும் |