‘இடைச் சொற்கிளவியும் உரிச்சொற் கிளவியும், அவற்று வழி மருங்கிற் தோன்றும் என்ப’ (பெய.5) என்ற சூத்திரத்தால் இடைச்சொல் உரிச்சொல் இரண்டும் பெயர், வினை இவற்றைச் சார்ந்து வரும் என்பது கூறப்பட்டமையின், அவற்றுள் ஒன்றற்கொன்று வேற்றுமையாதெனின், இடைச் சொல் பெயர் வினைகளிடத்துச் சார்ந்த சொல்லாய் 1 அப்பிரதானமாய் இருக்கும் என்றும், உரிச்சொல் அவற்றின் பகுதியாய்ப் பிரதானமாய் இருக்கும் என்றும் அறிக. உரிச்சொல்லைப் பற்றி விரிவாய் உரியியலிற் கூறப்படும். சிவலிங்கனார்: பெயரியலில் பெயர்ச்சொல் வினைச்சொல் எனச் சொல் இரண்டு என்பதும் அவற்றினிடமாக இடைச் சொல்லும் உரிச் சொல்லும் வரும் என்பதும் எனவே சொல் நான்கு வகைப்படும் என்பதும் கூறப்பட்டன. இச்சூத்திரமும் இடைச்சொல் பெயர் வினைகளோடு சார்ந்து வரும் என்பது கூறுகின்றது. அதனால் கூறியது கூறலாகும் இச்சூத்திரம். எனவே இதற்குத் தனிப் பொருள் கூறவேண்டும் எனக்கருதி உரையாளர்கள் உரை கூறினர். அவ்வுரை மூன்று வகையில் அமைகிறது. 1. பெயரியலில் கூறிய போது இடையுரிகள் பெயர் வினைகளைச் சார்ந்து வரும் என்றார். அதன் பொருள் காணும் போது பெயரை இடையும் வினையை உரியும் சார்ந்து வரும் என்றும் கொண்டு விடலாமாதலின் அதை விலக்குதற்கு இச் சூத்திரம் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து வரும் எனக் கூற வேண்டுவதாயிற்று. 2. பெயரியலில் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து வரும் என்றது சொல்லளவில் கூறப்பட்டது; பொருளளவில் கூறப்பட்டதன்று. இச் சூத்திரத்தில் ‘இடைச்சொல் தனக்கெனத் தனிப் பொருளின்றிப் பெயர்ப் பொருளையும் வினைப் பொருளையும் சார்ந்து அவற்றின் பொருளே தனக்கும் பொருளாக வரும், என்பது கூறப்பட்டது. 3. கொற்றன், மரம் எனப் பெயர்ச் சொல்லும் வந்தான், போனான் என வினைச் சொல்லும் தனித்து நின்று பொருள் உணர்த்துதல் போல் இடைச் சொல்லானது மன் தில் எனத் தனித்து நின்று பொருளுணர்த்தாது; பெயரொடும் வினை தனித்து நின்று பொருளுணர்த்தாது; பெயரொடும் வினை
1. அப்பிரதானம் முதன்மையில்லாதது - சிறப்பில்லாதது. |