சொல்லதிகாரம் - இடையியல்18

நன்னூல் 420.

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள இசைநிற யசைநிலை
குறிபென்எண் பகுதியின் தனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்.

இலக்கண விளக்கம். 251.

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள இசைநிறை யசைநிலை
இத்திறம் ஏழில் தனித்தியல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்.

தொன்னூல் விளக்கம். 130.

இடைச்சொல் தனிநிலை யின்றி முன்பின்
வினை பெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை
வினை யொப் புருபுகளும் விளங்குதம் பொருளவும்
இசைநிறைப் பனவும் அசைநிறைப் பனவும்
குறிப்பும் என எண் கூற்றவை என்ப.

முத்துவீரியம் ஒழிபியல் 1.

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
இசைநிறை யசைநிலை இருமூன்று திறத்தன.

இளம்.

1வ-று ;  புணரியல்  நிலையிடைப்  பொருள்நிலைக்கு  உதவுவன.
“இன்னே வற்றே” (எழு. புணரியல் 17) என்னுந் தொடக்கத்தன.

2 வினைசெயல்  மருங்கின்  காலமொடு  வருவன;  “அன்  ஆன்”,
(வினை. 8), “அம் ஆம்” (வினை. 5) என்னுந் தொடக்கத்தன.


1. வ-று விளக்கங்களைப் பிற உரையாளர் உரைகளிற் காண்க.

2. வினைச்   செயல் -   பகுதிவிகுதி    இடைநிலை    சாரியை
முதலியவாக வினைச் சொல்லை யமைத்தல். கால மொடுவருவன;
காலமும்   அதனுடன்   வரும்  விகுதி  முதலியவுமான இடைச்
சொற்கள்,  உண்டான்   என்பதில்  (உண்+ட்+ஆன்)  டகரக்கால
எழுத்தும்  ஆன் விகுதியும் இடைச் சொற்கள்.