சொல்லதிகாரம் - இடையியல்27

பற்றி   முன்கூறாதது,  வினைக்கண்  வருவன  பெரும்பான்மை யாகல்
பற்றிப் போலும்.

மற்றை   அசைநிலையும்,   இசைநிறையும்,    குறிப்பிற்   பொருள்
செய்குநவும்  இவ்வோத்தினுள்  தத்தம்  சிறப்புச்   சூத்தி   ரத்துள்ளே
உதாரணம் காட்டப்படும்,

ஒப்பில்  வழியாற்  பொருள்  செய்குநவற்றிற்கு  உதாரணம்  இதன்
பின்னதிகாரத்து உவமையியலுட் காணப்படும்.

இச்சூத்திரத்து     முன்னைய    மூன்றும்     முன்னர்     ஓதிப்
போந்தனவாகலான்         முன்வைக்கப்பட்டன.        பின்னையது
பின்னதிகாரத்துக்     கூறலால்   பின்   வைக்கப்பட்டது.   இடையன
இவ்வோத்தினுள் கூறப்படுதலான் இடைநின்றன.

ஆயின்  இடைக்கண்  நின்ற மூன்றனுள்ளும் பொருள் செய்வதனை
முன்சொல்லாது    அசைநிலை   இசைநிறைகளை  முன்  சொல்லியது
என்னையெனின்,  இவை  இரண்டும்  ஒழிய ஈற்றின் முன்னும் பின்னும்
நின்றவையெல்லாம் பெரும்பான்மையினவாய்  நிற்றலானும்,  அவைதாம்
அவையாய்    நிற்றலானும்,    இவைதாம்    அவையாய்     நிற்றல்
சிறுபான்மையாபலானும் என்பது.

வெள்.

இஃது அவ்விடைச் சொற்களின் பாகுபாடு கூறுகின்றது.

இ-ள் ;   முற்கூறிய    இடைச்சொற்கள்தாம்,  இருமொழி  தம்மிற்
புணர்தல்  இயன்ற  நிலைமைக்கண்  அவற்றின்  பொருள்   நிலைக்கு
உதவிசெய்து   வருவனவும்,   வினைச்சொற்களைமுடிக்குமிடத்து  அச்
சொல்லகத்துக்  காலங்   காட்டும்  உறுப்பு முதலியனவாய் நிற்பனவும்,
வேற்றுமைப்    பொருட்கண்    வேற்றுமையுருபுகளாய்   வருவனவும்,
தமக்கோர் பொருளின்றித் தாம்  சார்ந்த  பெயர் வினைகளை அசையப்
பண்ணும்    நிலைமையவாய்    வருவனவும்,   செய்யுட்கண்   இசை
நிறைத்தலே         பொருளாக         வருவனவும்,       தத்தங்
குறிப்பாற்பொருளுணர்த்துவனவும்,    ஒப்புமை    தோன்றாத    வழி
அவ்வொப்புமைப்    பொருண்மையையுணர்த்தி   வருவனவும்   எனச்
சொல்லப்பட்ட ஏழியல் பினையுடையன சொல்லுமிடத்து, எ-று.

‘புணரியல்  நிலையிடைப்  பொருள்  நிலைக்குதவுந’  என்றது. அல்
வழிப் பொருளுக்கு  உரியன  இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன
இவையென  எளிதிற்  பொருளுணர்ந்து  கொள்ளுதற்கு அறிகுறியாகிய
இன்,   வற்று    முதலிய   சாரியைகளை,  இவை  எழுத்ததிகாரத்திற்
கூறப்பட்டன.