இன், இற்று, உம் போல் இரு சொற்கள் புணரும் போது இடையில் வருவனவும்: (1). படித்தான் படிக்கிறான் படிப்பான். இங்கு த், கிறு, ப் - காலங் காட்டும் முறையில் வரும் த், கிறு, ப் முதலியனவும், (2). பெயர்களோடு சேர்ந்து வேற்றுமை யுருபாக வரும், ஐ, ஒடு, கு, இன், அது, இல், ஏ முதலிய உருபுகளும் (3) கற்றதனா லாய பயனென் கொல் ஓ! இவனா செய்தான் இவ்வாறு பொருளற்று நிற்கும் அசைநிலைச் சொற்களும் (4) ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ இவ்வளவிற் காணுங் கொல், இவ்வளவில் மீளுங் கொல்’ எனச் செய்யுளியல் குறித்து நிற்கும் இசை நிறைச் சொற்களும் (5). அடடே அப்படியா? சீ சீ அப்பால் போ, ஐயோ இறந்தனரோ - இவ்வாறு குறிப்பால் பொருள் தருவனவும் (6) அன்னம் போலத் தூயது, மதி போன்ற முகம், மயிலன்ன சாயலாள்- இங்குற்றவை போன்ற உவமை யுருபுகளும் (7) இவை போன்ற பிறவும் இடைச் சொற்களாம். பிற ; மரத்தை - அத்து சாரியை. ‘எண் என்ப ஏனை எழுத்து என்ப’- என்ப- இசை நிறை யிடைச் சொல். ‘வஞ்சிப்பது ஓரும் அவா’ ஓரும் - இடைச்சொல். என்ன, எப்போது வந்தாய்? என்ன-இடைச்சொல் பார் பார்! இப்படிக் கொடுமையுண்டா? பார் பார் - இடைச் சொல். அகரம் ஆகாரம் - கரம், காரம் இடைச்சொல். இவ்வாறு இடைச் சொற்கள் காற்றுப் போல எங்கும் ஒட்டி வரும். சுப். ‘வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும்’ என்பதற்கு உதாரணம் அன் ஆன்-அம் ஆம் என்னுந் தொடக்கத்தன |