சொல்லதிகாரம் - இடையியல்10

இடையியல்-பொருட்சுருக்கம்

இடைச்சொல்

இடை  என்பதற்கு   இடம்  என்பதும்,  இடை  (நடு)  என்பதும்
பொருள்.  பெயர்ச்சொல் இடமாகவும் வினைச்சொல்லிடமாகவும் வரும்
காரணத்தால்  இடைச்  சொற்கள்  இடைச்  சொல்  என்னும்  பெயர்
பெற்றன   என்பர்   சிலர்;   இன்னும்  சிலர்  மொழிக்கு  முன்னும்
பின்னுமாகவரினும்     பெரும்பான்மையும்    இடையில்   வருதலின்
இடைச்சொல்  எனப்பெயர்  பெற்றன  என்பர்.  முன்னோ  பின்னோ
இடையோ   வரும்போது   பெயரைச்   சார்ந்துவரின்   அப்பெயர்ப்
பொருளே   தமக்கும்   பொருளாகவும்,   வினையைச்  சார்ந்துவரின்
அவ்வினைச்   சொற்பொருளே   தமக்கும்   பொருளாகவும்   வரும்
அவ்விடைச்சொற்கள்.   எனவே  தமக்கெனப்  பொருளுடையனவல்ல
அவை.   அவ்வாறு  வரும்  போது  செய்யுளில்  அவற்றின்  இறுதி
எழுத்துகள்  திரிந்து  வருதலும்  உண்டு.  இரண்டு  இடைச்சொற்கள்
சேர்ந்து வருதலும் உண்டு.

அதுமன்-‘மன்’ என்னுமிடைச் சொல் பெயர்க்கு 1 முன் வந்தது.

கேண்மியா- ‘மியா’ என்னுமிடைச் சொல் வினைக்கு முன் வந்தது.

கொன் ஊர்-‘கொன்’ என்னுமிடைச்சொல்   பெயர்க்குப்  2  பின்
வந்தது.

ஓஓவினிதே-‘ஓஓ’  என்னுமிடைச்சொல்  வினைக்குப் பின் வந்தது.

உடனுயிர்  போகுக  தில்ல-‘தில்’ என்னுமிடைச்சொல்  தில்ல என
ஈறுதிரிந்தது.

வருக்தில்லம்ம-இதில் தில், அம்ம என்னும் இரண்டிடைச் சொற்கள் வந்துள. (1,3).


பிறைக் கோட்டிலிலுள்ள எண்கள் இடையியற் சூத்திர எண்கள்.

1,2: முன்பின் என்பன இடமுன் இடப்பின் ஆகக் கொள்க.