சொல்லதிகாரம் - இடையியல்30

என்றார்  உரையாசிரியர்.   “வினைச்   சொல்லை    முடிக்குமிடத்துக்
காலப்  பொருளாய்  வருவனவும்”  என்றும்,  “வினைச்  சொல்   ஒரு
சொல்லாயினும்   முதனிலையும்   இறுதி  நிலையும்  இடைச்சொல்லும்
ஆகப்  பிரித்துச்  செய்கை   செய்துகாட்டப்படுதலின்  ‘வினை செயல்
மருங்கின்’  என்றார்;  அவற்றுள்  ஒரு சாரன பாலுணர்த்தாமையானும்,
எல்லாங்  காலம்  உணர்த்தலானும்  ‘காலமொடு  வருநவும்  என்றார்”
என்றும் கூறினர் சேனாவரையர்.

“முதனிலை  நின்றுகாரியத்தினைத்  தோற்றுவிக்குமிடத்துக்   காலங்
காட்டும்  இடைச்சொற்களோடே  பாலும்  இடமும்  காட்டும்   இடைச்
சொற்களால்   வருவனவும்”   என்றும்,  “உண்டான்  என்புழி   உண்
என்னும்  முதனிலை  காலங்  காட்டுகின்ற  டகரத்தினையும்,   பாலும்
இடமும்  காட்டும் ஆணினையும் விரித்து நின்றவாறு காண்க”  என்றும்
கூறினர்  நச்சினார்க்கினியர்.  தெய்வச்  சிலை  யாரது   கொள்கையும்
இதுவேயாம்.

உரையாசிரியர்  மதப்படி  அன்  ஆன் அள் ஆள் முதலிய வினை
விகுதிகளே   இடைச்    சொல்லாகும்.  சேனாவரையர்  கொள்கையும்
அவ்வாறே   என்பது,   ‘டதற   வெண்பன   எதிர்   காலத்திற்குரிய
எழுத்தன்மையால், பாலுணர்த்தும் இடைச் சொற்கு  உறுப்பாய்  வந்தன
எனவே  படும்’  என்ற  வாக்கியத்தாலும்,  ‘ஆகாரம்  காலவெழுத்துப்
பெறாது   உண்ணாதின்னா   வெனவரும்’   என்ற   வாக்கியத்தாலும்,
‘அவற்றுள்  ஒரு  சாரன  பாலுணர்த்தாமையானும்,   எல்லாங்  காலம்
உணர்த்தலானும்’    என்று    இச்சூத்திர    வுரையிற்    கூறப்பட்ட
வாக்கியத்தானும் விளங்குகின்றது. இவ்விருவரது  கொள்கையை  ஊன்றி
நோக்கின்  அன்  ஆன்  முதலிய  வினை விகுதிகள்  காலவெழுத்தை
முன்னர்ப்  பெற்று வருமேயன்றித் தனியே வாராவென்பதும்,  இவர்கள்
காலத்தில்  காலவெழுத்துக்கள் இடைச் சொல்லாகக்  கருதப்படவில்லை
என்பதும்,    அன்    ஆன்    முதலியனவே    இடைச்சொல்லாகக்
கருதப்பட்டன    என்பதும்    பெறப்படும்.   மேலும்    ‘காலமொடு’
என்னுமிடத்து  உடனி  கழ்ச்சியையுணர்த்தும்  ‘ஒடு’   என்னும்  உருபு
இவர்கள் கூற்றிற்குப் பொருந்தும்.

நச்சினார்க்கினியர்   தெய்வச்சிலையார்   கொள்கையை  நோக்கின்
‘காலமொடு    வருநவும்’    என்பதற்குக்   காலங்காட்டும்    இடைச்
சொற்களோடே   (பாலும்  இடமும்  காட்டும்  இடைச்   சொற்களாய்)
வருவனவும்  என்று  பொருள்  கொள்ள வேண்டியிருக்கும்,  வருநவும்
என்பதற்கு அவைதாம் என்பது எழுவாயாகையால் அவ்வாறு  பொருள்
கொள்வது பொருந்துமா? ஆயி