7) ஒப்பில் வழியாற் பொருள் செய்குந:- எ.டு : - எரியகைந்தன்ன தாமரை - யாழ்கெழுமணி மாடற்றந்தணன் - “குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்” “வின் பொருபுகழ் விறல் வஞ்சி, மகன்றாயாதல் புரைவதாலெனவே” என உவமச்சொல் இடைச்சொல்லாக வரும். பிறவும் உவமவியலுரையுட் கண்டு கொள்க. இதனைத் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குநவற்றின் பின் வைத்தமையான் இவையும் தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவாம். ஈண்டு வகைப்படுத்த ஏழுனுள் முதல்நின்ற மூன்றும்மேலே உணர்த்தப்பட்டமையின் முன்வைக்கப் பெற்றன. ஒப்பில் வழியாற் பொருள் செய்வன இனி உவமவியலுள் உணர்த்தப்படுதலின்பின் வைக்கப்பட்டது. ஏனைய மூன்றும் இவ்வியலுள் உணர்த்தப்படுதலின் இடையே வைக்கப்பட்டன. இடைச்சொல் நிற்கும் இடம் |