இல. வி. 251. பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல். இளம். வ. று : பெயரை 1 முன்னும் பின்னும் அடுத்து வருவன: ‘அதுமன்’, கொன்னூர் (குறுந். 138) என்பன. வினையை முன்னும் பின்னும் அடுக்குமாறு: வருகதில் லம்மவெஞ் சேரி சேர ஓதந்தார், ஓ கொண்டார். என்பன. தம்மீறு திரிந்தவை: கொன்னை, மன்னை (இடை. 4) (இடை.6) என்பன பிறிதவண் நிலையிற்று: 2மகவினை என்பது. சேனா. இ-ள் : மேற் சொல்லப்பட்ட இடைச்சொல், இடை வருதலேயன்றித், தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோர் இடைச்சொல் ஓரிடைச் சொல்முன் வருதலுமாகிய அத்தன்மையவெல்லாம் உரிய, எ-று. உ-ம் : ‘அதுமன்’ (புறம் 147) எனவும், கேண்மியா (புறம். 148) எனவும் சாரப்படு மொழியை முன்னடுத்து வந்தன. 3 கொன்னூர் (குறுந். 138) எனவும், ‘ஓஒவினிதே’ (குறள் 1176) எனவும் பின்னடுத்து வந்தன. ‘உடனுயிர் போகுக 4 தில்ல’ (குறுந். 57) என ஈறு திரிந்து வந்தது. 5 வருகதில் லம்ம வெஞ் சேரி சேர (அகம் 276) என்பது பிறிதவணின்றது.
1. முன்பின் என்பன இடமுன் இடப்பின் ஆகும். 2. மகவினை என்பதில் இன் சாரியை யிடைச்சொல்லுடன் இரண்டன் உருபாகிய ஐ இடைச் சொல்லும் இருத்தலின் பிறிதவண் நிலையலுக்கு உதாரணம் ஆம். இதனினும் ‘வருகதில்லம்ம’ எனச் சேனாவரையர் காட்டிய உதாரணம் சிறக்கும். 3. கொன் - அச்சம் 4. தில் என்பது தில்ல என ஈறு திரிந்தது. 5. தில் என்பதுடன் அம்ம என்று பிறிதும் ஓர் இடைச்சொல் அங்கு நின்றது. |