பக்கம் எண் :

கற்பியல்115
எ - டு :

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை 

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால் 

தண்பெரும் பந்தல் தருமணல் ஞெமிரி. 

மனைவிளக் குறுத்து மாலை தொடரி 

கனையிருள் அகன்ற கவின்பெறு காலை 

கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் 

கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென 

உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் 

பொதுச்செய் கம்பலை முதுசெம் பெண்டிர் 

முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர 

புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று 

வாலிலை மகளிர் நால்வர் கூடி 

கற்பினின் வழாஅ நற்பல உதவிப் 

பெற்றோற் பெட்கும் பிணையை யாகென 

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி 

பல்லிருங் கூந்தல் நெல்லொடு தயங்க 

வதுவை நன்மணங் கழிந்த பின்றை 

கல்லென் சும்மையர் ஞெரேர் எனப்புகுந்து 

பேரிற் கிழத்தி ஆகெனத் தமர்தர 

ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் 

கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து 

ஒடுங்கினள் இடந்த ஓர்புறந் தழீஇ 

முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப 

அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின் 

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரைஎன 

இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின் 

செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர 

அகமலி உவகைய ளாகி முகனிகுத்து 

ஒய்யென இறைஞ்சி யோளே மாவின் 

மடங்கொள் மதைஇய நோக்கின் 

ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே  

(அகம்-86)
 

இஃது உள்ளப்புணர்ச்சியான் நிகழ்ந்த களவின்பின் கரணமொடு நிகழ்ந்த
வரைவின்பின்  பள்ளி   யிடத்து  நிகழ்ந்ததனைப்   பின்னொரு காலத்துத்
தலைவி ஊடியஞான்று  தோழியை  வாயில்   வேண்டிய தலைவன் கூற்று.
இதன்கண் அவர்தம்  குலமரபிற்கேற்ற   கரணங்கள்  நிகழ்ந்தவாறும் தமர்
கொடுக்கப் பெற்றவாறும் கண்டு கொள்க.