சொல்லதிகாரம் - இடையியல்41

விளக்கம் : முன்  என்பது  இலக்கண நெறியின் வலப் பக்கத்தைக்
குறிக்கும்.  ஏன்?  நாம்   இடமிருந்து  வலம்  நோக்கி  எழுதுகிறோம்.
ஆதலின்     முன்னோக்கிச்    செலும்    வலம்   ‘முன்’   எனவும்,
தொடக்கமாகிய இடம் ‘பின்’ எனவும் கூறப்படும்.

அதுதான் - தான்

அடித்தான் பார் - பார்

=முன் உற்றது

1 அம்சிறைத்தும்பி - அம்

ஆ ஆ! அப்படியா - ஆ ஆ

=பின் உற்றது.

சொல்வதை உடனே செய்க - உடன் ஈறு திரிந்தது.

2 காண்டற்கு - அல் ஈறு திரிந்து ‘அற்’ ஆயிற்று. 

மரத்தின் மேல - அத்து இன் மேல்

3 ஊர்ப்புறத்தில் - புறம் அத்து இல்

=இடைச்சொல் மேல்

இடைச்சொல்.

மன், கொன், உம் - இவைஈறுதிரிந்து மன்னை, கொன்னை,  உம்மை
என வழங்கப் பெறும்.

பால.

கருத்து :  இடைச்சொற்கள் பெயர்   வினைகளை  யடுத்து  வரும்
முறைமையும் பிற இயல்புகளும் ஆமாறு கூறுகின்றது.

எ-டு ; - பண்டுகாடுமன் - கேண்மியா: இவை முன்னடுத்து நின்றன.
கொன்னூர்    -   ஒஓ   இனிதே:  இவை  பின்னடுத்தன.  உடனுயிர்
போகுகதில்ல  -  தில்  என்பது ஈறுதிரிந்து வந்தது.  வருகதில்லம எம்
சேரிசேர - பிறிதவண் வந்து இணைந்து நின்றது.

“அன்னவையெல்லாம்”   என்றதனான்,  மன்னைச்  சொல்தில்லைச்
சொல்  எனத்தம்மை உணரநின்ற வழியும் ஈறுதிரிதலும்,  னகாரை  என
எழுத்துச் சாரியை ஈறுதிரிதலும்


1. அம்சிறைத்தும்பி    என்பதில்   அம்     அழகு     என்னும்
பொருள்படுவதோர் இடைச்சொல்.

2. காண்டற்கு  - இதில் அல் இல்லை; தல் என்பது தொழிற்பெயர்
விகுதி. லகரம்  றகரமாகத்  திரிந்தது இவ்வுருவு நோக்கியாதலின்
ஈறு   திரிதற்கு  இவ்  வுதாரணம்  சிறவாது.   மன் - மன்னை,
தில்-தில்ல என்பன போல்வனவே சிறக்கும்.

3. ஊர்ப்புறத்தில்  -  புறத்து,  இல்  என்பன  இரண்டும்   ஏழன்
உருபின் பொருள்பட வந்த இடைச்சொற்கள்.