சொல்லதிகாரம் - இடையியல்42

வேற்றுமையுருபுகளுள்    காவலோனக்களிறஞ்சும்மே   என   ஐகாரம்
முழுவதும் திரிதலும் பிறவும் கொள்க.

மன்
 

247.

கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே.               (4)

(கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று
அ மூன்று என்பமன்னைச் சொல் ஏ).
 

ஆ. மொ.

இல.

The scholars say that the morpheme ‘Man’ denotes  three
senses  which  are  that which is past, that which is created
and that which is understood.

ஆல்

The  morpheme  (man)  appears  to express nostolgia for
what is lost, wonder at a complete change and irony at what
is implied.

பி.இ.நூ.

நேமி. 52.

காண்தகுமன் ஆக்கம் கழிவே ஒழியிசை.

நன். 432

மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆக்கம்.

இல. வி. 263

கழிவே ஆக்கம் ஒழியிசை அசைநிலை
என நான் கென்ப மன்னைச் சொல்லே.

முத்து. ஒ. 2.

ஆக்கம் ஒழியிசை கழிவையும் தரும்மன்.

இளம்.

இச்சூத்திரம்       என்னுதலிற்றோவெனின்,     இடைச்சொற்களை
ஏழுவகையென   விரித்தார்;  அவற்றுள்  மூன்றுவகை மேலேயுணர்த்தி,
ஒழிந்த   நான்குவகையுள்  தத்தங்குறிப்பிற்  பொருள்   செய்குநவற்றை
விரிப்பான் தொடங்கினார். 1 அது கருத்து.


1. ஈண்டு “அஃது உணர்த்துதல் நுதலிற்று” என்றிருப்பின்  நன்று -
சுந்தரமூர்த்தி.