சொல்லதிகாரம் - இடையியல்43

வ-று :1 ‘சிறிய   கட்பெறினே  எமக்கீயு  மன்னே’   (புறம்  .235)
எனக்கழிவின்கண் வந்தது.

‘பண்டு   காடுமன்,   இனிக்கயல்   பிறழும்   வயலாயிற்று’   என
ஆக்கத்தின் கண் வந்தது.

2 ‘கூரியதோர்  வாண்மன்  -   இனி  இற்றென்றானும்.  .  .  ஒரு
சொல்லை ஒழிவு பட வந்தமையின் ஒழியிசை.

சேனா.

இவ்வோத்தின்கண்  உணர்த்தப்படும்   மூவகையிடைச்   சொல்லுள்
தத்தங்  குறிப்பாற்  பொருள்  செய்குந  பொருளுணர்த்துதற்   சிறப்புப்
பரப்புடைமையான் அதனை முன் உணர்த்துகின்றார்.

இ-ள் : கழிவு  குறித்து  நிற்பதும்,  ஆக்கம்   குறித்து   நிற்பதும்
ஒழியிசைப்  பொருண்மை  குறித்து  நிற்பதும் என மண்ணைச்   சொல்
மூன்றாம், எ-று.

உ-ம் :  “சிறியகட்  பெறினே  யெமக்  கீயு  மன்னே”  (புறம் 235)
என்புழி   மன்னைச்  சொல்,  இனி  அது கழிந்தது என்னும்  பொருள்
குறித்து  நின்றது  ‘பண்டு காடுமன்: இன்று கயல் பிறழும்  வயலாயிற்று’
என்புழி  அஃது  ஆக்கம்  குறித்து  நின்றது.  ‘கூரியதோர்  வாள்மன்’
என்புழித்திட்பம்      இன்று     என்னும்     எச்சமாய்     ஒழிந்த
சொற்பொருண்மை நோக்கி நின்றது.

தெய்.

ஈண்டு  உரைக்கப்படுகின்ற இடைச்சொல் நான்கும்  பொருள் புணர்
இடைச்சொல்லும்,   பொருள்புணரா  இடைச்  சொல்லும்   என   இரு
வகைப்படும்.  அவற்றுள்,  பொருள்  புணரா  இடைச்சொல்   ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : கழிந்தது  என்னும்   பொருண்மையும்,   ஆம்   என்னும்
பொருண்மையும்,   எஞ்சிய  இசையான்  உணரும்    பொருண்மையும்
உணரவரும், மண் என்னும் சொல், எ-று.


1. “கொஞ்சம்   கள்கிடைத்தாலும்   எமக்கு   ஈயும்:  இனி  அது
கழிந்துபோயிற்று” என்பது பொருள்.

2. கூரியதோர்  வாளாயிருந்தது   இப்பொழுது   இத்  தன்மைத்து
(மழுங்கியது) ஆயிற்று.