உ-ம் : ‘சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம், 235) - இது கழிவு. ‘பண்டுகாடுமன்’ - இஃது ஆக்கம், பண்டு காடு என்பதன்றோ இன்று நாடு என்று ஆக்கம் உணர்த்துகின்றது எனின், அதன் பொருளை இதுவும் கூடி நின்று உணர்த்திற்று எனவுணர்க. ‘பண்டு கூரியதோர் வாள்மன்’ - இஃது ஒழியிசை. இன்றோர் குறைபாடு உடைத்தாயிற்று என்றும் சொல் ஒழிந்தமை தோற்றுவித்து நின்றமை காண்க. வெள். . . . கழிவு என்பது பயனின்றிக் கழிந்ததற்கு இரங்குதலாகும். ஆக்கம் என்பது முன்னை நிலையினும் மிக்குளதாதல். ஒழியிசை என்பது சொல்லொழிந்து நின்ற சொற்களின் பொருளைத் தந்து நிற்றல். ஆதி. மன் என்னும் இடைச்சொல் கழிவு ஆக்கம் ஒழியிசைப் பொருளில் வரும். 1உ-ம் : அன்று யாவரும் வந்து அடிதொழ வாழ்ந்தேன் மன் - இன்று அது இல்லை என இரங்கல் - வாழ்ந்தேனே? எனப்பொருள் கழிவு. பண்டு பரிசிலர் மன் : இன்று புரவலர் (பரிசில் வாழ்க்கையர் ஆக்கமுற்று இன்று பிறங்குகின்றார் எனப் பொருள்) - ஆக்கம். நல்ல ஒரு பாட்டுமன் - பாட்டு நல்லது. பாடிய இசை அதனைக் கெடுத்தது என ஒழிந்த ஒரு பொருள் தந்தது- ஒழியிசை. மன் இடத்தில் ‘உம்ம்’ என்று அமைத்து ஏக்கம், வியப்பு, எள்ளல் பொருள் தோன்றக் கூறிய கருத்தை நன்கு உணர்க. இசரயேல்: மன் சங்க இலக்கியத்தில் மிகுதி, உறுதி ஆகிய பொருள்களிலும் வழங்குகின்றது. பசந்தனள்மன் என் தோழி (குறுந். 303) - மிகுதி. உறுவது ஒன்று உண்டுமன் (குறுந். 199 - உறுதி) (இடையும் உரியும் - பக். 20)
1. காட்டப்பட்ட உதாரணங்கள் உலக வழக்கில் இல்லாதன. செய்யுள் வழக்கே காட்டல் சிறந்தது. |