பால. கருத்து : இவ்வியலுள் உணர்த்தப்படும் மூவகை இடைச் சொற்களுள் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வன பொருளுணர்த்துஞ்சிறப்பும் அவற்றின் பன்மையும் நோக்கி அவற்றை முதற்கண் உணர்த்தத் தொடங்கி இச் சூத்திரத்தான் ‘மன்’ என்னும் இடைச்சொல் பெற்று வரும் பொருட் குறிப்பு இவை எனக் கூறுகின்றார். பொருள் : மன் என்னும் இடைச்சொல் செயற்கழிவும் ஆக்கமும், எச்சமாக ஒழிந்து நிற்கும் பொருண்மையும் என்று சொல்லப்பட்ட அம்மூன்று பொருட் கூறுபாட்டினை உடையதென்று கூறுவர் புலவர். எ-டு : “சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே” இது கழிந்த பொருள் சுட்டிநின்றது. ‘பண்டுகாடுமன்’ (இப்பொழுது வயலாயிற்று) இது ஆக்கம் குறித்து நின்றது. கூரியதோர் வாள்மன் (இப்பொழுது திட்பமின்று) இது ஒழிந்த சொற் பொருண்மை சுட்டி நின்றது. தில் |