“வருகதில் லம்மவெஞ் சேரி சேர” (அகம். 276) என வந்தக் கால் இன்னது செய்வல் என ஒழியிசை குறித்தது. கல். என் - எனின், இதுவுமது. இ-ள் : விழைவின் கண்ணதும் காலத்தின் கண்ணதும் ஒழி யிசைக் கண்ணதும் என மூன்று கூற்றதாம் என்ப தில் என்னும் இடைச்சொல், எ-று. உ-ம் : 1. “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே” (குறுந். 14) இது விழைவு. 2. “பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே” என்பது காலம். 3. “வருகதில் லம்மவெஞ் சேரி சேர” என்பது ஒழியிசை. ஆதி. 1 உ-ம் : பரிசுச் சீட்டின் பணம் பெறுகதில் யானே - விழைவு. பெற்றதில் மகிழ்க அவனே - காலம் (பெற்ற நாளில்) வருகதில் அவன் - ஒழியிசை - வந்தால் அடிப்பேன். கொன் |