குறிப்பாற் பொருளுணர்த்தும் இடைச்சொற்கள் 1மன்: கழிவு ஆக்கம் ஒழியிசை எனும் பொருள்களில் வரும். (4) தில்: விழைவு காலம் ஒழிபிசை எனும் பொருள்களில் வரும். (5) விழைவுப் பொருளில் வரும்போது தன்மையிடத்துக்கே வரும். உ-ம்:பெறுகதில் அம்ம-பெறுவேனாக. (12) கொன்: அச்சம் பயனின்மை காலம் பெருமை எனும் பொருள்களில் வரும். (6) உ-ம்: எச்சம் சிறப்பு ஐயம் முற்று எதிர்மறை எண் தெரிநிலை ஆக்கம் எனும் எட்டுப் பொருள்களில் வரும். (7) ‘சாத்தனும் வந்தான்’ எனின் ‘கொற்றனும் வந்தான்’ என்பதை அதாவது சொல்லாது எஞ்சியதைத் தழுவுதலின் எச்சவும்மையாம். ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வருவான்’ என்பதில் ‘சாத்தனும்’ என்பதன் உம்மைக் கொற்றனையும், ‘கொற்றனும்’ என்பதன் உம்மை சாத்தனையும் தழுவுதலின் அவைகளும் எச்சவும்மைகளாம். முன்னது எதிரது தழுவியதாகவும் பின்னது இறந்தது தழுவியதாகவும் கொள்ளப்படும். ‘கொற்றன் வரலும் உரியன்’ என்பதன் உம்மை வாராமைக்கும் உரியன் என்பதைத் தெரிவித்தலின் எதிர்மறையும்மை. இந்த எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலும் உரியன்’ என ஒரே தொடரில் வாரா. (35) ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான்’ என்னும் தொடரில் ஒன்றை உம்மையின்றிச் செஞ்சொல்லாகக் கூறவேண்டின், அச்செஞ்சொல்லை முன்னே கூறிப் பின்னர் உம்மை சார்ந்த சொல்லைக் கூறல் வேண்டும். அதாவது ‘கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான்’ எனக்கூறாமல் ‘சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான்’ எனக் கூறல் வேண்டும். (36)
1. உதாரணம் காட்டப்படாதனவற்றுக்கு அவ்வச் சூத்திரங்களிற் கண்டு கொள்க. விளக்கம்வேண்டிச் சிற்சில உதாரணங்கள் காட்டப்பட்டன. |