ஆ.மொ: இல. The morpheme ‘Kon’ denotes four senses Which are fear, uselessness, time and greatness. ஆல். The morpheme Kon appears to introduce the four implied expressions of fea, uselessness, time and greatness. பி.இ. நூ: நேமி. சொ. 52 . . . . . . . . . . . . . . . . . . . கொன் ஆண்டறி காலம் பெருமையச்சமே - நீண்ட பயனின்மை இல. வி. 265 அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. முத்து. ஒ. 4 அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைக் கிளவி. இளம். வ-று :1 கொன்முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே (குறுந். 91) என அச்சத்தின்கண் வந்தது. கொன்னே வந்தது கொன்னே போயினார் என்பன பயமின்றி வந்தன. “கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ” என்று நலியுங்காலை யறிந்து வந்த வாடை என்றவாறு: இது காலத் தின் கண் வந்தது.
1. பொருள் : அச்சம்தரும் போர்க்களத்திலுள்ள இரவு துயிலாது விழித்திருக்கும் ஊரில் உள்ளார்போல நீ துயிலும் நாள்கள் சில ஆகுக. |