“கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே” (குறுந். 138) என்பது பெருமைக் கண் வந்தது. சேனா. இ-ள் : அச்சப் பொருளதும், பயமின்மைப் பொருளதும், காலப் பொருளதும், பெருமைப் பொருளதும் எனக் கொன்னைச் சொல் நான்காம், எ-று. உ-ம் : “கொன்முனை யிறவூர் போலச் சிலவாகுக நீ துஞ்சு நாளே” (குறுந். 91) என்புழி அஞ்சி வாழும் ஊர் எனவும், “கொன்னே கழிந்தன் றிளமை” (நாலடி. 55) என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும், “கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ” என்புழிக் காதலர் நீங்கிய காலம் அறிந்து வந்த வாடை எனவும், “கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே” (குறுந். 138) என்புழிப் பேரூர் துஞ்சினும் எனவும் கொன்னைச் சொல் நான்கு பொருள்பட வந்தவாறு கண்டு கொள்க. தெய். இதுவுமது. இ-ள் : அச்சப் பொருண்மையும், பயனின் றென்னும் பொருண்மையும், காலப் பொருண்மையும், பெரிது என்னும் பொருண்மையும் பற்றி வரும், கொன் என்னுஞ் சொல், எ-று. உ-ம் :“கொன்முனை யிரவூர் போல” (குறுந். 91) என்பது அச்சம் உணர நின்றது. “கொன்னே கழிந்தன் றிளமையும்” (நாலடி. 55) என்புழிப் பயனின்மை யுணர நின்றது. “கொன் வரல் வாடை” என்ற வழிக் காலத்து வருகின்ற வாடை எனக் காலம் உணர நின்றது. “கொன்னூர் துஞ்சினும்” (குறுந். 138) என்றவழிப் பெருமை யுணற நின்றது. இம் மூன்று சொல்லும் பெயர் வினையை யொட்டி வாராது தனி வந்து ஒப்பில் வழியாற் பொருளுணர்த்தினமை |